தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். பதவி கிடைப்பது இனி கஷ்டம்
சென்னை:
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் அவர்களது எண்ணிக்கையைக்குறைக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செலவுகளைக் குறைப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட சுவாமிநாதன் கமிஷன் இதனைத் தெரிவித்துள்ளது.இந்தக் கமிஷனின் பரிந்துரைப்படிதான் அரசு ஊழியர்களுக்கு போனஸ் கட் செய்யப்பட்டது. டி.ஏ. நிறுத்தப்பட்டது.
பி.எப். லோன் ரத்து செய்யப்பட்டது. ஊதிய உயர்வுகள் நிறுத்தப்பட்டன. அரசு நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முடிவும்எடுக்கப்பட்டது. அரசுக் கார்களுக்கான பெட்ரோல் படி குறைக்கப்பட்டது.
இவ்வாறு பல பரிந்துரைகளைச் சொன்ன சுவாமிநாதன் கமிஷன், மிக அதிகமான ஊதியம் மற்றும் சலுகைகளை அனுபவித்துவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதுவரை செலவுகளைக் குறைக்கும் அரசின் கட்டளைகளை நிறைவேற்றி அரசு ஊழியர்களின் வயிற்றெரிச்சலுக்கு உள்ளாகி வந்தஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கே இப்போது ஆப்பு விழுந்துள்ளது.
மிக அதிகமாக ஐ.ஏ.எஸ்கள் இருப்பதால் மிகச் சாதாரணமாக பதவிகளில் கூட அவர்களை நியமிக்க வேண்டியுள்ளது. சாதாரணபதவியில் இருந்தாலும் ஐ.ஏ.எஸ்சுக்கு உரிய ஊதியம், சலுகைகள், கார்களைத் தர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இதனால்அரசுக்கு பெரும் வெட்டிச் செலவாகிறது என்று சுவாமிநாதன் கமிஷன் சுட்டிக் காட்டியுள்ளது..
இருக்கும் அதிகாரிகளைக் குறைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதால் இனிமேல் ஐ.ஏ.எஸ். அதிகாரத்துக்குபதவி உயர்வு செய்யப்படும் மாநில அரசு அதிகாரிகளைக் குறைக்குமாறு சுவாமிநாதன் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி பதவிக்கு வரும் அதிகாரிகள் ஒரு பக்கம் இருக்க, மாநில அரசின் மூத்த அதிகாரிகளும் ஐ.ஏ.எஸ்களாகபதவி உயர்வு பெற்று வருகின்றனர்.
வழக்கமாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வெழுதி துணைக் கலெக்டர்கள், டி.ஆர்.ஓக்கள் போன்ற பதவிகளில் இருக்கும்அதிகாரிகள் அரசுக்கு வேண்டியவர்களாக இருந்தால் ஐ.ஏ.எஸ். ஆகி விடுவார்கள்.
ஆனால், இனிமேல் இது நடக்காது என்று தெரிகிறது. பல குரூப்-1 ஆபிசர்களும் தாங்கள் ஐ.ஏ.எஸ். ஆகும் தினத்துக்காகக்காத்துக் கொண்டுள்ளனர். ஆனால், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அரசு ஏற்றால் இனி இவர்களுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்துதரப்படமாட்டாது.
இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது டி.ஆர்.ஓக்கள் எனப்படும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் தான். இவர்கள்சுவாமிநாதன் கமிஷன் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
-->


