For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஞ்சை- கோவை இடையே ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்: 20ம் தேதி முதல் அறிமுகம்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

வரும் 20ம் தேதி முதல் கோயம்புத்தூருக்கும் தஞ்சாவூருக்கும் இடையே ஜனசதாப்தி ரயில் இயக்கப்பட உள்ளது.

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக இந்த ரயிலை அறிமுகப்படுத்துவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஏ.சி வசதி,உணவு வசதி கொண்ட அதி வேக சதாப்தி ரயில்கள் இந்தியாவில் மிகவும் பாப்புலராகி வருகின்றன. ஆனால், இவற்றின் கட்டணம்மிக அதிகம்.

இதையடுத்து ஜனசதாப்தி என்ற பெயரில் கட்டணம் குறைவாகவும் அதே நேரத்தில் கூடுதல் வசதிகள் கொண்ட, அதிவேகரயில்களை ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது. ரயில்வேயால் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான தஞ்சாவூருக்குஇப்போது இந்த ரயில் கிடைத்துள்ளது.

20ம் தேதி முதல் கோவை- தஞ்சை இடையே இந்த ரயில் இயங்கும். இதன் முதல் வகுப்புப் பெட்டிகளில் சோதனைரீதியில்டி.விக்களும் வைக்கப்பட உள்ளன. இத் திட்டம் வெற்றியடைந்தால் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளிலும் டிவிக்கள்வைக்கப்படும்.

அதே போல சென்னை- மதுரை இடையிலான கூடல் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது இந்த ரயிலைகுருவாயூர் வரை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல பாண்டிசேரி- விழுப்புரம் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளையும் தென்னக ரயில்வேதுரிதப்படுத்தியுள்ளது.

வழக்கமாக தமிழக ரயில் திட்டங்களை வட இந்திய அதிகாரிகள் புறக்கணித்தே வந்தனர். ஆனால், ரயில்வேத்துறைஇணையமைச்சராக ஏ.கே. மூர்த்தி வந்தபிறகு நிலைமை பெருமளவு மாறியுள்ளது.

இவருக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது. தமிழ் கூட எழுத்துக் கூட்டித் தான் வாசிக்கிறார். ஆனாலும் காங்கிரஸ் ஆட்சியில்இருந்து மெத்தப்படித்த அமைச்சர்கள் பலரை நாம் பார்த்துவிட்டோம். இவர்களால் தமிழகத்துக்கு எந்தப் பலனும்ஏற்பட்டதில்லை, மூர்த்தி ஏதோ செய்ய முயற்சிக்கிறார். இதனால் இவர் மீது பிரதமர் அலுவலகத்துக்கு பல புகார்களை ரயில்வேஅதிகாரிகள் தட்டிவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மூர்த்திக்கு விரைவில் கல்தா கிடைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X