அடுத்த மாதம் இந்தியா வருகிறார் கோபி அன்னான்
ஐக்கிய நாடுகள்:
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான கோபி அன்னான் அடுத்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ளார்.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஒரு மாநாட்டில் பிப்ரவரி மாதம் கலந்துகொள்ளும் அன்னான், அப்படியே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பயணம் செய்யலாம் என்று தெரிகிறது.
இந்தியாவில் இரண்டு நாட்கள் அன்னான் தங்கியிருப்பார் என்று தெரிகிறது. ஒரு நாள் டெல்லியிலேயே அவர்இருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் தற்போது பதற்றம் எதுவும் இல்லாவிட்டாலும், இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் குறித்தே அன்னான் தன்னுடைய இந்தியப் பயணத்தின்போதுவிவாதிப்பார் என்று தெரிகிறது.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தற்போது வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், கொழும்புவுக்கும் அன்னான் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் அன்னானின் இந்திய, இலங்கைப் பயணங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றுகூறப்படுகிறது.
-->


