குடிநீரில் சாக்கடை: மதுரையில் மக்கள் சாலை மறியல்
மதுரை:
குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாகப் புகார் கொடுத்தும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்காததைத் தொடர்ந்து, ஆரப்பாளையம் பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மதுரையின் மையப் பகுதியில் உள்ளது ஆரப்பாளையம். இப்பகுதியைச் சுற்றிலும் உள்ள மாநகராட்சி குடிநீர்குழாய்களில் கடந்த சில நாட்களாக சாக்கடை நீரும் கலந்து வந்து கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக மதுரை மாநகராட்சியிடம் அப்பகுதி மக்கள் பல முறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் தொடர்ந்துஅலட்சியப்படுத்தி வந்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் ஆரப்பாளையம் பகுதியில் இன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வந்து எவ்வளவோ கூறியும் மக்கள் தங்கள்சாலை மறியலைக் கைவிடவில்லை.
இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு வந்து சேர்ந்தனர். குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதுதொடர்பாக உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.
இதையடுத்தே பொதுமக்கள் தங்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல்போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-->


