For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழிசை மும்மூர்த்திகளுக்கு உரிய கெளரவம் கிடைக்கவில்லை: கருணாநிதி கோபம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தியாகய்யர், முத்துச்சாமி தீக்ஷிதர், ஷாமா சாஸ்திரி ஆகியோருக்கு இணையான தமிழிசை கலைஞர்களான முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாச்சலக் கவிராயர் ஆகியோருக்கு கர்நாடக இசையுலகம் இன்னும்உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:

சீர்காழியைச் சேர்ந்த தமிழிசைக் கலைஞர்களான முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாச்சலக் கவிராயர்ஆகிய மூவரும் பிராமணர்கள் அல்லர் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர்களுக்கு உரிய மரியாதைகொடுக்கப்படவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது.

தியாகய்யர், முத்துச்சாமி தீக்ஷிதர், ஷாமா சாஸ்திரி ஆகியோருக்கு எள்ளளவும் குறையாத திறமை கொண்டவர்கள்இந்த மூன்று தமிழ் இசைக் கலைஞர்களும்.

தியாகய்யர் உள்ளிட்ட மும்மூர்த்திகள் மீது திமுகவுக்கு அதிக மரியாதை உள்ளபோதிலும், தமிழிசைமும்மூர்த்திகளுக்கும் அந்த மரியாதை கிடைக்க வேண்டும் என்ற அவா மனதுக்குள் இருந்து கொண்டேஇருக்கிறது.

எந்தக் காரணத்திற்காகவும் அவர்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்று விரும்புகிறோம்.

ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்திற்காக போராடியவர்கள் அண்ணாவும், பெரியாரும் மற்றும் அம்பேத்கரும். இதன்காரணமாகவே அவர்கள் பெயரில் பல்வேறு விழாக்கள் எடுக்கிறோம். அவர்களுக்கு சிலை வைத்துவணங்குகிறோம், மரியாதை செய்கிறோம்.

ஆனால், இப்படிச் செய்வதை பத்திரிக்கையாளர் சோ கண்டித்துள்ளார். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

சீனா போன்ற கம்யூனிஸ சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் நாடுகளின் தலைவர்கள் கூட இந்தியாவுக்கு வந்தால்காந்தி, நேரு சமாதிகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதை நாம் பார்க்கிறோம். அதுபோலத்தான், திராவிடதலைவர்களின் சிலைகளுக்கும், நினைவிடங்களிலும் நாங்கள் மாலை போட்டு மரியாதை செலுத்துகிறோம்.

அதேபோல, இஸ்லாமியர்கள் நடத்தும் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் அவர்விமர்சித்துள்ளர். நான் முதல்வராக இருந்தபோது மதுரை மீனாட்சி அம்மன், சென்னை கபாலீஸ்வரர்கோவில்களுக்கு சென்று சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்டதை சோவுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தியாகராஜ ஆராதனை இன்று தொடக்கம்:

இந் நிலையில் திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஆறு நாள் நடக்கும் இந்த ஆராதனை விழா,தியாகப்பிரும்மம் என்று வர்ணிக்கப்படும் கர்நாடக இசை மூர்த்தி தியாகராஜரின் நினைவாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நடக்கவுள்ளது 156-வது ஆண்டு விழாவாகும். இதனை பிரபல கர்நாடக இசைக் கலைஞர் ஏ.கே.சி.நடராஜன் துவக்கி வைக்கிறார்.தியாகராஜரின் சமாதிக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலில் இந்த விழா நடக்கிறது. தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

ஏராளமான இசைக் கலைஞர்கள் இந்த ஆராதனை விழாவில் கலந்து கொள்கிறார்கள். 22ம் தேதி பஞ்சரத்தின கீர்த்தனைகளைப் பாடும் நிகழ்ச்சிநடைபெறுகிறது. அனைத்து இசைக் கலைஞர்களும் இணைந்து இதைப் பாடுவார்கள்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X