டிவி நடிகை மர்மச் சாவு: வீட்டில் பிணமாகத் தொங்கினார்
சென்னை:
டி.வி. நடிகையான ரேவதிஸ்ரீ (வயது 35) மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடல் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது.
ராஜ் டிவியில் ஊர்வம்பு நிகழ்ச்சியில் நடித்து வந்தவர் ரேவதிஸ்ரீ. வாராவாரம் மாநிலத்தின் அரசியல் நடப்புகளை அலசும் அந்தத்தொடரில் ரங்கமணி என்ற கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்து வந்தார். இது தவிர சன் டிவியில் அண்ணாமலை, சொந்தம் மற்றும்அவளுக்கு மேல் ஒரு வானம் ஆகிய தொடர்களிலும் நடித்து வந்தார்.
18 ஆண்டு காலமாக டிவி மற்றும் சினிமாவில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்தார். எஸ்.வி. சேகரின் நாடகங்ளிலும்நடித்து வந்தார்.
இவர் சென்னை சாலிக்கிராமத்தில் தனது மகன், மகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் கணவர் இமானுவேலுக்கும் இடையேபிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவர் பிரிந்து சென்று சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அவரையே திருமணம்செய்யவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரும் சமீபத்தில் இவரைக் கை கழுவி விட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு இவர் வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கினார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் இவரது வீட்டுக்கு மலேசியாவில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதில் பேசியநபரும் இவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும். அதன் பின்னர் வீட்டில் கண்ணீரும் சேகமுமாய் இவர் இருந்ததாகவும்அண்டை வீட்டினர் கூறுகின்றனர்.
இந் நிலையில் தான் ரேவதிஸ்ரீ தூக்கில் தொங்கியுள்ளார்.
இது முதலில் தற்கொலை என்று கூறப்பட்டது. ஆனால், இவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
இவரது சாவுக்கு முதல் கணவர் காரணமா, இல்லை ஏமாற்றிய தொழிபதிபர் காரணமா என்று தெரியவில்லை. விசாரணை நடந்துவருகிறது.
-->


