"விண்டோஸ் ரகசிய குறியீடு": ரஷ்யாவுக்கு மைக்ரோசாப்ட் வழங்கியது
மாஸ்கோ:
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய "விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட"த்தின் ரகசியக் குறியீட்டு வார்த்தையை(secret code) ரஷ்யாவுக்குக் கொடுத்துள்ளது. இதன்மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் "விண்டோஸ்" ரகசியக்குறியீட்டைப் பெறும் முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரும் கம்ப்யூட்டர் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய ரகசியக் குறியீட்டுவார்த்தையை அவ்வளவு எளிதாக யாருக்கும் கொடுத்து விடாது.
இந்நிலையில் உலகெங்கிலும் பிரபலமாகியுள்ள தன்னுடைய "விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட"த்தின் ரகசியக்குறியீட்டு வார்த்தைகள் அனைத்தையும் ரஷ்யா பெற்றுள்ளது.
விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்.பி., விண்டோஸ் சி.ஈ. மற்றும் விண்டோஸ் சர்வர் 2003 ஆகியவற்றின்ரகசியக் குறியீடுகளைத்தான் ரஷ்யாவுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.
ரஷ்ய அரசுக்குச் சொந்தமான தகவல் தொழில்நுட்ப நிறுவனமான "அட்லஸ்" இந்தக் குறியீட்டு வார்த்தைகளைப்பெற்றுள்ளது.
ரஷ்யாவும் அவ்வளவு எளிதாக வெளிநாட்டு நிறுவனங்களுடன் இதுபோன்ற தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளாது.ஆனால் தற்போது ஒரு மேலைநாட்டு நிறுவனத்தின், அதுவும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டமைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-->


