இலவச உணவு திட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: எதிர் கட்சிகளுக்கு ஜெ. சூடு
சென்னை:
ஏழை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொச்சைப்படுத்துவதுமக்கள் விரோத செயலாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
காவிரி டெல்டாவில் 8 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. இதனால்இம்மாதத் துவக்கத்தில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து வறுமை, பசி, பட்டினியால் வாடும் ஏழை விவசாயிகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தைத்தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த பொங்கல் தினம் முதல் விவசாயிகளுக்கு நாள்தோறும் மதிய உணவுவழங்கப்பட்டு வருகிறது.
பலவித குளறுபடிகளுடன் இத் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் 20 லட்சம் விவசாயிகளக்குஉணவு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை 8.94 லட்சம் விவசாயிகள் மட்டுமேகூப்பன்களை வாங்கியுள்ளனர். இவர்களில் சாப்பிட வருபவர்கள் சுமார் 60 சதவீதம் தான். ஆனால், இவர்களுக்குக்கூட சரியான முறையில் உணவு தரப்படவில்லை.
இதனால் காலித் தட்டுக்களுடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலைக்கு பல விவசாயக் குடும்பங்கள்தள்ளப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தை அனைத்து எதிர்க் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. உலகிற்கே உணவளித்து வரும்விவசாயிகளைப் பிச்சைக்காரர்கள் போல பாத்திரம் ஏந்த வைத்துவிட்டது அரசு என்று குற்றம் சாட்டப்பட்டுவருகிறது.
இந்த இலவச உணவுத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, விவசாயிகளுக்கு அரிசி, பருப்பு மற்றும் நிவாரணத்தொகையை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் இலவச உணவுத் திட்டத்தை எதிர்க்கும் கட்சிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஜெயலலிதாஅறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
காவிரியில் நீர் திறந்துவிட முடியாது என்று பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசு, தமிழக காவிரி டெல்டாவிவசாயிகளின் அன்றாட வாழ்க்கையையே நாசப்படுத்தி விட்டது.
மேலும் இந்த முறை பருவமழையும் பொய்த்து விட்டதால் விவசாயிகள் விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிட்டனர்.
கடும் துயரத்திற்கு ஆளாகிவிட்ட விவசாயிகளைக் காப்பது மாநில அரசின் பொறுப்பு. அதனால்தான் கடும் நிதிநெருக்கடியிலும் இந்த இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
அரசின் இந்தத் திட்டத்தை பாராட்த்தான் வாய் இல்லாவிட்டாலும் ஆதாரமற்ற பொய்களை அவிழ்த்து விட்டுஎதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருவது வேதனை தருகிறது.
விவசாயிகளுக்கு உணவு வழங்கி விவசாயிகளை பிச்சைக்காரர்களாக ஆக்கி விட்டதாக எதிர்க்கட்சியினர்கொச்சைப்படுத்திக் கூறுவது மக்கள் விரோத செயலாகும். உண்ண உணவின்றி இருப்பவர்களுக்கு உணவுவழங்குவது அரசின் தலையாய கடமை.
உணவுக்குப் பதில் அரிசி கொடுத்தால், அது பல்வேறு முறைகேடுகளுக்கும் வழி வகுக்கும், முறையாகச்சென்றடையாது என்ற காரணத்தினால்தான் மதிய உணவாக வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு சத்துணவு மையத்திற்கு 50 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்கள். அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படவே இல்லைஎன்பதுதான் உண்மை.
பல மையங்களில் 500 பேர் வரை வந்து இலவச மதிய உணவைப் பெற்றுச் சென்றுள்ளனர். எத்தனை பேர்வருகிறார்களோ அத்தனை பேருக்கும் உணவு தரப்படும்.
அரசின் இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை மொத்தம் சுமார் 9 லட்சம்பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 77 சதவீதம் பேர் உணவு பெற்று வருகின்றனர். இதுவே இந்தத் திட்டம் மிகப்பெரும் வெற்றி பெற்றதற்குச் சான்றாகும்.
மேலும் விவசாயிகள் பலனடைவதற்காக இந்த மாத இறுதி வரை (31ம் தேதி வரை) தங்களது பெயர்களை பதிவுசெய்து கொள்ளவும் காலவரையறையையும் நீட்டித்துள்ளோம்.
மனிதாபிமான நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் இதை விமர்சனம் செய்து வருவதுஅரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள் என்று அந்தஅறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-->


