பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்: தொண்டர்களுக்கு கருணாநிதி உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் பசி, பஞ்சம், பட்டினி, விவசாயிகள் தற்கொலை என்று நீண்டுகொண்டிருக்கும் நிலையில் என்னுடையபிறந்தநாள் விழா கொண்டாடப்படுவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் ஜூன் 3ம் தேதி என்னுடைய 80வது பிறந்தநாளாகும். அகவை 80 என்பதால் அதை விரிவாகவும்விமரிசையாகவும் கொண்டாட கழகத் தொண்டர்கள் இப்போதே ஏற்பாடுகள் செய்த கொண்டிருப்பதாக எனக்குத்தகவல்கள் வந்துள்ளன.
ஆனால் என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம். அந்நாளில் என்னை வந்து சந்தித்து வாழ்த்துக் கூறவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக ஆட்சியில் நடந்து வரும் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து கடந்த ஆண்டே நான் என்னுடையபிறந்தநாளைக் கொண்டாடவில்லை என்பதைத் தொண்டர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழகத்தில் தற்போதும் வறட்சி, பஞ்சம், பசி, பட்டினி என்று இருக்கும்போது நான் பிறந்தநாள் விழாகொண்டாடிக் கொண்டிருப்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அது மட்டுமின்றி, என் குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும் முரசொலி மாறன் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உடல் நலிவுற்று இன்னும் பூரண குணம்பெறாத நிலையில் உள்ளார்.
இந்த நிலையில் எனக்குப் பிறந்தநாள் விழா எடுப்பதையோ, அதைக் கொண்டாடி வாழ்த்தி மகிழ என்னைத் தேடிநீங்கள் வருவதையோ ஏற்பதற்குரிய கடினமான இதயம் எனக்கு இல்லை.
எனவே என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடும் பணிகளில் ஈடுபடாமல், வேறு ஏதாவது கழகப் பணிகளில்தங்கள் நினைப்பையும் நேரத்தையும் செலவிடுமாறு திமுக தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றுஅவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக- தே.ஜ.கூ. உறவு கெடாது:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
சாத்தான்குளத்தில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது. மாநில பா.ஜ.கவுடன் எங்களுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லைஎன்றார்.
-->


