For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்டார் நடிகை லதா: அவதூறு வழக்கு வாபஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான செய்தியை வெளியிட்டதற்காக சென்னை 6வது கூடுதல் செஷன்ஸ்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் நடிகை லதா. இதையடுத்து அவருக்கு எதிராகத்தொடரப்பட்டிருந்த வழக்கை ஜெயலலிதா வாபஸ் பெற்றார்.

பிரபல நடிகையும், முன்னாள் எம்.ஜி.ஆர். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான லதா கடந்த 1999ம்ஆண்டு திருவொற்றியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ஜெயலலிதா டெல்லியில் மெளரியாஷெரட்டன் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, ஒரு சர்வரை அடித்தார் என்றும் அடுத்தவர்களை அடிப்பது என்பதுஅவருக்கு புதிதான விஷயமல்ல என்றும் கூறியிருந்தார்.

இது அப்போது அனைத்துப் பத்திரிக்கைகளிலும் செய்தியாக வெளிவந்தது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் சென்னை 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குதொடரப்பட்டது. ஜெயலலிதா தனது மனுவில்,

லதா கூறியது முழுக்க முழுக்கப் பொய்யான ஒரு விஷயம். நடக்காத ஒன்றை நடந்ததாக அவர் கூறியிருப்பதுஅரசியல் ரீதியில் திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கத்துடன் பேசப்பட்டது.

எனவே இதனால் எனது கெளரவத்திற்கு ஏற்பட்ட குந்தகத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர லதாவுக்கு உத்தரவிடவேண்டும் என்று அம்மனுவில் ஜெயலலிதா கூறியிருந்தார். ஜெயலலிதா தரப்பு வாதத்தை லதா மறுத்திருந்தார்.

இந்த நிலையில் தனது வக்கீல் குமரகுரு மூலம் தாக்கல் செய்த ஒரு மனுவில் லதா கூறியதாவது:

ஜெயலலிதாவின் புகழைக் குறைக்கும் நோக்கம் எனக்குக் கிடையாது. வாசகர்களைக் கவர்வதற்காகவிளம்பரத்திற்காக பத்திரிக்கைகளில் இதுதொடர்பான செய்திகள் வெளியாகின.

இருந்தாலும் எனது பேச்சு ஜெயலலிதாவின் மனதை புண்படுத்தியிருந்தாலோ, அவருடைய புகழுக்கு பாதிப்புஏற்பட்டிருந்தாலோ அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

எனவே என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொண்டு ஜெயலலிதா தன்னுடைய மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறுகேட்டுக் கொள்கிறேன் என்று தன் மனுவில் லதா கூறியிருந்தார்.

இதையடுத்து லதா மீதான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஜெயலலிதா மற்றொரு மனுவை நீதிமன்றத்தில்தாக்கல் செய்தார். அம்மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி நைனார் முகம்மது இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X