கருணாநிதியை பயமுறுத்திய 1,115
சென்னை:
போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள், அழைப்பிதழ்களில் பெயர்களைப் போடும் போது கொஞ்சம் சிக்கனத்தைகடைப்பிடிக்க வேண்டும் என்று திமுகவினருக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமீபத்தில் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த பொதுச் செயலாளர் அன்பழகன் திரும்பிவந்து என்னிடம் ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்றைக் கொடுத்தார்.
அதைப் பார்த்த நான் அதிர்ந்து விட்டேன். திமுக இளைஞர் அணி சார்பில் அடிக்கப்பட்ட அந்த துண்டறிக்கைவெறும் ஏழு பக்கங்கள் கொண்டது. ஆனால், இடம் பெற்றிருந்த பெயர்களின் எண்ணிக்கையோ 1,115.
இத்தனை பேரும் அந்த மண்டபத்திலே கூடினாலே அது நிரம்பி விடும். அதுவே ஒரு மாநாடு போல ஆகியிருக்கும்.யாருடைய பெயரும் விடுபட்டு விடக் கூடாது என்பதற்காக அத்தனை பேரின் பெயர்களையும் அடித்துள்ளார்கள்.
இதுபோல, மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் சிலரது பெயர்களை வேண்டுமென்றே விட்டுவிட்டு போஸ்டர்கள்,துண்டறிக்கைகள் அடித்து வருகிறார்கள். அப்போதுதான் பிரச்சினையே ஏற்படுகிறது. (அழகிரி கோஷ்டி ஸ்டாலின்கோஷ்யினர் பெயரைப் போடுவதில்லை. அதே போல ஸ்டாலின் கோஷ்டி அழகிரி கோஷ்டியின் பெயரைப்போடுவதில்லை)
எனவே, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களின் பெயர்களை, முக்கியமானவர்களின் பெயர்களை, அவர்கள்வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் அத்தனை பேரின் பெயர்களையும் அச்சிட வேண்டும் என்பதில்லை. இதனை உணர்ந்துசெயல்பட்டால் கழகத்திற்கு நல்லது என்று கூறியுள்ளார் அவர்.


