For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் ரப்பர் சாலை போடும் பணி தொடக்கம்
சென்னை:
சென்னை நகரில் ரப்பர் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது.
சென்னையில் உள்ள சாலைகளை ரப்பர் சாலைகளாக மாற்றியமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்காக ரூ.28.37 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மொத்தம் 222 கி.மீ. தொலைவிலான சாலைகள்ரப்பர் சாலைகளாக அமைக்கப்படவுள்ளன.
இந்தப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக தியாகராய நகரில் உள்ள துரைசாமி சாலை, மேற்குமாம்பலத்தில் உள்ள பிருந்தாவன் சாலை மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வாட்டர் கிராப்ட்ஸ் சாலை ஆகியவற்றைரப்பர் சாலைகளாக மாற்றியமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
மற்ற பகுதிகளிலும் ரப்பர் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


