சாத்தான்குளம் தேர்தல்: காங். வேட்பாளர் நாளை மனு தாக்கல்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் மகேந்திரன் நாளைதன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளராக நேற்று முன்தினம் மகேந்திரன் அறிவிக்கப்பட்டார். இத்தொகுதியில்போட்டியிடுவதற்காக 22 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும், தன்னையே கட்சித் தலைமை தேர்ந்தெடுக்கும்என்று அவர் பெரிதும் நம்பியிருந்தார்.
அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. "சாத்தான்குளம் காங்கிரஸின் கோட்டை என்பதை இந்தத் தேர்தல்நிரூபிக்கும்" என்று கூறியுள்ள மகேந்திரன் நாளை வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
இத்தொகுதியில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் நீலமேகவர்ணம் போட்டியிடுகிறார். அவர் நேற்று தன்னுடையவேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
இதுவரை 13 பேர் மனுத்தாக்கல்:
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 13 பேர் வேட்பு மனுத் தாக்கல்செய்துள்ளனர்.
அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் மட்டுமே கட்சி சார்பில் இதுவரை மனு செய்துள்ள ஒரே வேட்பாளர்ஆவார். அதிமுக மாற்றுவேட்பாளரான அவருடைய மகன் கதிரவ ஆதித்தன் தவிர மற்ற அனைவருமேசுயேச்சைகள்தான்.
நேற்று வரை வேட்பு மனுத் தாக்கல் செய்த எட்டு பேரின் பட்டியல்: நீலமேகவர்ணம் (அதிமுக), கதிரவஆதித்தன்(அதிமுக மாற்று வேட்பாளர்), நூர் முகம்மது, பத்மராஜன், ஜாபர்சலீம், ரபீக், ராமநாதன், மோகன்ராஜ்(அனைவரம் சுயேச்சைகள்).
இவர்களைத் தவிர மேலும் ஐந்து சுயேச்சை வேட்பாளர்கள் இன்று தங்களுடைய வேட்புமனுக்களைத் தாக்கல்செய்தனர்.
அதிமுக விதிகளை மீறுவதாக காங். புகார்:
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவினர் விதிமுறைகளை மீறி செயல்பட்டுவருவதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது.
சாத்தான்குளம் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார் திருநகரி பகுதியில் அரசு பத்திரப் பதிவு அலுவலக சுவர்கள், கோவில்சுவர்களில் அதிமுகவினர் பிரசார விளம்பரத்தை வரைந்து வைத்து, விதிகளை மீறி செயல்படுவதாக காங்கிரஸ்கட்சியினர் புகார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரிக்கும், மத்திய தேர்தல் கமிஷனுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாகவும்காங்கிரஸ் தேர்தல் குழுவினர் தெரிவித்தனர்.
அதிமுகவினரின் தேர்தல் விதிமீறல்களை தொகுதி தேர்தல் அதிகாரி கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர்கள்தெரிவித்துள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications