For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்தியப் படை கோருகிறது காங்கிரஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சாத்தான்குளம் தொகுதியில் அதிமுக தொடர்ந்து விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு வருவதால் அக்கட்சி மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் கமிஷனரான மிருத்யுஞ்சய் சாரங்கியிடம் காங்கிரஸ் கட்சிபுகார் செய்துள்ளது.

இது தொடர்பாக ஒரு புகார் மனுவை காங்கிரஸ் கட்சியினர் இன்று சாரங்கியிடம் அளித்து, அம்மனுவைத்தலைமைத் தேர்தல் கமிஷனுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களிடம் பேசுகையில்,

சாத்தான்குளம் தொகுதியில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறித் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.அதிமுகவினரின் அராஜகம் புற்றுநோய் பரவுவது போலப் பெருகிக் கொண்டே வருகிறது.

சமீபத்தில் அமைச்சர் அனிதா கிருஷ்ணன் பயன்படுத்திய அரசுக் கார் சாத்தான்குளம் பிரச்சாரத்திற்காகப்பயன்படுத்தப்பட்டபோது வழியிலேயே விபத்துக்குள்ளானது. அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அந்தக் காரைஓட்டிச் சென்றவர் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர்தான் என்றும் தெரிய வந்துள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்குச் சொந்தமான அந்தக் காரை சென்னை நகருக்குள் மட்டுமேஓட்டுவதற்கு உரிமை உள்ளது. ஆனால் அரசுக் காரை சாத்தான்குளம் சென்று வருவதற்கு அதிமுக அமைச்சர்பயன்படுத்தியுள்ளார்.

அரசுக்குச் சொந்தமான அந்தக் கார் சென்னையை விட்டு சாத்தான்குளத்திற்கு சென்றது ஏன்? அதிமுகவினரின் பலவிதிமுறை மீறல்களில் இது முக்கியமானது.

மேலும் சாத்தான்குளம் மக்களுக்குக் கொடுப்பதற்காகவே ஈரோட்டில் சுமார் 25,000 சேலைகள், வேஷ்டிகள்,சுடிதார்கள், மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள் ஆகியவற்றை அதிமுகவினர் வாங்கியுள்ளனர். இதற்கானஆதாரம் எங்களுக்குக் கிடைத்துள்ளது.

இவ்வாறு ஏராளமான தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் அதிமுகவினர் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அரசு நிர்வாகமும், அரசு அதிகாரிகளும், அரசு வாகனங்களும் சாத்தான்குளம் தேர்தல்பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்படுவது இவற்றின் மூலம் தெரிகிறது.

மேலும் சாத்தான்குளத்தில் எப்போது பார்த்தாலும் குறைந்தது 10அமைச்சர்களாவது அதிகாரிகளோடு சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறிக்கொண்டிருக்கும் நிலையில் சாத்தான்குளத்தில் எப்போதும் 10 அமைச்சர்கள் இருப்பதால் அரசுப் பணம்வீணாகிறது.

எனவே ஆளுங்கட்சியின் தேர்தல் முறைகடுகளை தேர்தல் கமிஷன் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றுசாரங்கியிடம் அளித்த மனுவில் நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதிமுகவினரை விட தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று தமிழகப் போலீசாரும் சாத்தான்குளம் தொகுதியில்அடாவடித்தனமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

எனவே சாத்தான்குளம் தேர்தல் பாதுகாப்புப் பணியில் மத்தியப் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த வேண்டும்என்றும் தேர்தல் கமிஷனிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X