வரதட்சணை கேட்டு பெண் எரித்துக் கொலை: கணவன் கைது
பழனி:
பழனியில் வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் உள்பட 3பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்தப் பெண்ணின் மாமியாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
பழனியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கும் மல்லிகாவுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம்நடந்தது.
திருமணம் நடந்த நாளிலிருந்தே மல்லிகாவை ராமலிங்கத்தின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் மல்லிகாவிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்த ராமலிங்கம், திடீரென்று அவர் மீதுமண்ணெண்ணெயை ஊற்றி நெருப்பையும் பற்ற வைத்தார்.
இதனால் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் மல்லிகா கதறத் தொடங்கினார். அதற்குள் ராமலிங்கம் வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டார்.
மல்லிகாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்துமல்லிகாவைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனாலும் அதற்குள் முக்கால்வாசி எரிந்து கருகிப் போன மல்லிகா, போலீசாரிடம் மரண வாக்குமூலம் அளித்தார்.தன் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர்தான் தன் சாவுக்குக் காரணம் என்று கூறிய பின் மல்லிகாபரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ராமலிங்கம் உள்பட மூன்று பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி விட்டமல்லிகாவின் மாமியாருக்கும் போலீசார் வலை விரித்துள்ளனர்.


