For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாத்தான்குளத்தில் ஜெ. 6 நாள் பிரச்சாரம்: பிஷப் யோசனைப்படி செயல்பட்ட காங்.

By Staff
Google Oneindia Tamil News

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதா வரும் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை 6நாட்கள் சூறாவளித் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.

சாத்தான்குளத்தில் வரும் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 25 வேட்பாளர்கள்களத்தில் உள்ளனர். ஆனாலும் அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளரானவழக்கறிஞர் மகேந்திரன் ஆகிய இருவருக்கும் இடையில்தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் நீலமேகவர்ணத்தை ஆதரித்து ஜெயலலிதா ஆறு நாட்களுக்கு பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக வரும் 17ம் தேதி அவர் சாத்தான்குளம் செல்கிறார். அழகப்பபுரம் கிராமத்தில் தொடங்கி அன்று மட்டும்26 கிராமங்களில் ஜெயலலிதா சுற்றுப் பயணம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அவருடன் நீலமேகவர்ணமும்செல்கிறார்.

மறுநாள் ராஜபத்தி விலக்கு என்ற இடத்தில் பிரசாரத்தைத் தொடங்கி சூறாவளிப் பயணத்தை மேற்கொள்கிறார்ஜெயலலிதா. தொடர்ந்து 19ம் தேதி ஆசிர் விலக்கு என்ற இடத்தில் தொடங்கி சுற்றியுள்ள கிராமங்களில்ஜெயலலிதா ஓட்டு வேட்டை ஆடுவார்.

பின்னர் 20ம் தேதி ஒருநாள் மட்டும் ஓய்வெடுத்துக் கொள்ளும் ஜெயலலிதா, அதற்கு மறுநாள் கண்ணம்பாறைகிராமத்தில் பிரச்சாரம் செய்வார்.

கடைசியாக 22ம் தேதி கால்வாய் கிராமத்தில் பிரசாரத்தைத் தொடங்கி தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பார்.

ஓ. பன்னீர்செல்வம், வளர்மதி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 10ம் மேற்பட்ட அமைச்சர்களும்,எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் சாத்தான்குளத்தில் குவிந்துள்ளனர். தெருத்தெருவாக இவர்கள் பிரச்சாரம்மேற்கொண்டுள்ளனர்.

பிஷப்-காங். தலைவர்கள் சந்திப்பு:

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை தொடங்கியது.

இப் பகுதியில் கிருஸ்துவ நாடார் இன மக்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் பிஷப் ஜெயபால்டேவிட்டை காங்கிரஸ் தலைவர்களான சோ.பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவுகேட்டனர்.

பாளையம்கோட்டையில் இச் சந்திப்பு நடந்தது. இதையடுத்து காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக பிஷப்உறுதியளித்தார்.

இங்கு அதிமுக இந்து வேட்பாளரை அறிவித்ததால் காங்கிரசையும் இந்து வேட்பாளரையே அறிவிக்குமாறு பிஷப்தான் கேட்டுக் கொண்டார் என்ற செய்தியும் உண்டு. காங்கிரஸ் சார்பில் கிருஸ்துவரை நிறுத்தினால் அக் கட்சியைஇந்துக்களுக்கு எதிரானது என்று பிரச்சாரம் செய்ய அதிமுக திட்டமிட்டிருந்தது.

இதையடுத்து கிருஸ்துவ மக்களின் வாக்குகள் எப்படியும் காங்கிரசுக்கு வந்துவிடும் என்பதால் இந்துவேட்பாளரையே அறிவிக்குமாறு காங்கிரசுக்கு பிஷப் தான் யோசனை கூறியதாக அவருக்கு நெருக்கமானவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லக்கண்ணுஇன்று காலை தன் பிரசாரத்தைத் தொடங்கினார்.

"கணக்கு காட்ட வேண்டும்":

இதற்கிடையே சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் 3 நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் பிரசாரகணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளருடன் மூன்று கார்கள் மட்டுமே செல்லலாம். நடத்தை விதிகளைமீறும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X