For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கர்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த ஈராக்கியர்களுக்கு ஒசாமா அழைப்பு

By Staff
Google Oneindia Tamil News

அம்மான் (ஜோர்டன்):

ஈராக்கைத் தாக்க அமெரிக்கா தயாராகி வரும் நிலையில் ஒசாமா பின் லேடனிடம் இருந்து இன்னொரு ஆடியோ கேசட் வந்துள்ளது. அதில்அமெரிக்கர்கள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்துமாறு ஈராக்கியர்களுக்கு பின் லேடன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனை அல்-ஜஸீரா தொலைக் காட்சி ஒலிபரப்பியது. பக்ரீதையொட்டி இந்த கேசட்டை லேடன் அனுப்பியிருப்பதாக அல்-ஜஸீராகூறுகிறது. அந்த கேசட்டில் பின் லேடன் கூறியிருப்பதாவது:

நகர்ப் பகுதி போரைச் சந்திக்கத் தயாராகுங்கள். பதுங்கு குழிகளை இப்போதே தயார் செய்து கொள்ளுங்கள். அமெரிக்கப் படைகள் உள்ளேவந்தால் அவர்களை தகர்த்து எரியுங்கள். இதற்கான வீரமரண தற்கொலைப் படைத் தாக்குதலுக்குத் தயாராகுங்கள்.

அமெரிக்கர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு உயிர் மீதான அச்சத்தை ஏற்படுத்துங்கள்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் தரைத் தாக்குதலுக்கே வரவில்லை. அல்-கொய்தாவினரின் தற்கொலைத் தாக்குலைச் சந்திக்க அவர்கள்தயாராக இல்லை. அந்த உயிர் நடுங்கிகளுக்கு மீண்டும் பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கு ஈராக் மக்கள் தயாராக வேண்டும்.

வானத்தில் இருந்து அவர்கள் குண்டு மழை பொழிவார்கள். அதற்காக கலங்கிவிடாதீர்கள். அதைத் தவிர வேறு எதையும் அவர்களால்செய்ய முடியாது. தரையில் தற்கொலைத் தாக்குதல் நிச்சயம் நடக்கும் என்று தெரிந்தால் உள்ளேயே வர மாட்டார்கள்.

வானில் இருந்து வரும் குண்டுமழையில் இருந்து தப்ப நிறைய பதுங்கு குழிகளை இப்போதே வெட்டி மறைத்து வைத்துக் கொள்ளுங்கள்.அவர்களை போரை உடனே முடிக்க முடியாத அளவுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துங்கள்.

மரம், வீடு, கார் என அனைத்து மறைவிடங்களில் இருந்து திடீர் என அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்தி உயிர் வாங்குங்கள்.உயிர்களை இழந்தால் அந்தப் பக்கமே அமெரிக்கா எட்டிப் பார்க்காது.

அதே போல ஈராக்குக்கு எதிரான அமெரிக்க தாக்குதலுக்கு அரபு நாடுகள் உதவக் கூடாது. அப்படி உதவி செய்பவர்கள் இஸ்லாத்தின்துரோகிகள். அவர்களுக்கும் பாடம் கற்பிக்கப்படும்.

சதாம் ஹூசைன் பதவியில் இருப்பாரா போவாரா என்ற கவலை ஈராக்கியர்களுக்குத் தேவையில்லை. உங்கள் நாட்டை காக்க வேண்டியதுதான் முக்கியம். சதாம் பற்றி கவலைப்பட வேண்டாம்.

ஜோர்டன், மொராக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஏமன் போன்ற காட்டிக் கொடுக்கும் நாடுகளுக்கு விரைவில் அதற்கானபரிசு தரப்படும்.

இவ்வாறு பின் லேடன் அதில் கூறியுள்ளார்.

இதற்கிடையே அல்-கொய்தா தான் எங்களுக்கு மிகப் பெரிய எதிரி என அமெரிக்கா கூறியுள்ளது. பின் லேடனின் இந்த லேட்டஸ்ட் கேசட்மூலம் ஈராக்குக்கும் அல்- கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு வெட்ட வெளிச்சமாகிவிட்டதாக அமெரிக்கவெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பவுஸ்ஸர் கூறினார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X