கள்ளச் சாராய விற்பனையை எதிர்த்த இளைஞரை "டார்ச்சர்" செய்த போலீசார்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கள்ளச் சாராயம் விற்கப்படுவதை எதிர்த்து புகார் கொடுத்த இளைஞரைக் காவல்நிலையத்தில் அடைத்து சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய்மேடு கிராமத்தில் கள்ளச் சாராய விற்பனை ஜரூராகநடைபெற்று வருகிறது.
இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த சிவானந்தம் என்ற 24 வயது இளைஞர்வாய்மேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
இதையடுத்து கள்ளச் சாராய விற்பனைக்கு வாய்மேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பழகனும் உடந்தையாகஉள்ளார் என்று மாவட்ட எஸ்.பியிடம் சிவானந்தம் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதி அன்பழகனும், ஐந்து போலீசாரும் சிவானந்தத்தின் வீட்டுக்குள்அத்துமீறி நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த அவரை அடித்து, உதைத்து காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்றனர்.
பின்னர் காவல் நிலையத்தில் சிவானந்தத்தை அடைத்து, அவரைச் சராமாரியாக அடித்து உதைத்து போலீசார்துன்புறுத்தினர்.
இது தொடர்பாக சிவானந்தத்தின் தந்தை கிராம நலக் கமிட்டியின் தலைவர் இந்திரசித்துவிடம் புகார் தெரிவித்தார்.இதையடுத்து அவர்கள் வேதாரண்யம் டி.எஸ்.பி. ராமச்சந்திரனிடமும் தாசில்தாரிடமும் புகார் கொடுத்தனர்.
ஆனால் அதற்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த ஜனவரி 26ம் தேதிதலைஞாயிறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சைப் பிள்ளையிடம் சிவானந்தத்தை ஒப்படைத்தார் அன்பழகன்.
இருந்தாலும் அங்கும் சிவானந்தத்தை சித்ரவதை செய்வது தொடர்ந்துள்ளது. அவரைப் போலீசார் பயங்கரமாகத்தாக்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ராமச்சந்திரன், அன்பழகன் மற்றும் பிச்சைப் பிள்ளை ஆகிய மூன்று போலீஸ் அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழக மனித உரிமை கமிஷனிடம் சிவானந்தம் புகார் மனு தாக்கல்செய்துள்ளார்.
இதற்கிடையே வாய்மேடு கிராமத்திற்குச் சென்ற அன்பழகன், இனிமேல் கிராமத்திற்குள் வந்து இரவு நேரத்தில்யாரையும் கைது செய்ய மாட்டேன் என்றும், அப்படிக் கைது செய்தாலும் ஊர் மக்களிடம் கூறிவிட்டுத்தான் கைதுசெய்வேன் என்றும் உறுதி அளித்துள்ளார். தாசில்தார் முன்னிலையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அவர்இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.


