For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலாவுடன் வந்தார் ஜெ.: நாளை முதல் சாத்தான்குளத்தில் பிரச்சாரம்

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி:

அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க முதல்வர் ஜெயலலிதா இன்று தூத்துக்குடி சென்றார். 5 நாளை முதல்சாத்தான்குளத்தில் 5 நாட்கள் அவர் தீவிர ஓட்டு வேட்டை நடத்துவார்.

ஜெயலலிதாவின் இந்த பயணத்தை ஒட்டி தலைமைச் செயலகமே தூத்துக்குடிக்கு நகர்ந்து விட்டது. மூத்தஅதிகாரிகள் அனைவரும் தூத்துக்குடி சென்றுவிட்டனர். பெரும் எணணிக்கையிலான பைல்களும் வேன்கள்,கார்கள் மூலம் தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

அமைச்சர்கள் அனைவருமே தூத்துக்குடியில் தங்கிருயிருந்து சாத்தான்குளத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இதனால் அவர்களது துறை அதிகாரிகளும் தூத்துக்குடியில் குவிந்துள்ளனர்.

அடுத்த 5 நாட்களுக்கு தூத்துக்குடி தான் தமிழகத்தின் நிர்வாகத் தலைநகராக இருக்கும் என்ற அளவுக்கு அரசுஎந்திரமே முழு அளவில் அங்கு குடிபெயர்ந்துவிட்டது.

முதல்வரின் பாதுகாப்புக்காக தூத்துக்குடியிலும் சாத்தான்குளத்திலும் சுமார் 2,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்ட போலீசார் தவிர, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்தும் அழைத்துவரப்பட்டுள்ள போலீசார் தென் மண்டல ஐ.ஜி. தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக நாளை தான் ஜெயலலிதா சாத்தான்குளம் செல்வதாக இருந்தது. ஆனால், அமைச்சர்களைக் குவித்தும்,ஏராளமான பணம் செலவு செய்தும் நிலைமை அதிமுகவுக்கு சாதகமாக இல்லை என்பதை உளவுப் பிரிவினரும்,லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தனது பயணத்தை ஜெயலலிதா ஒரு நாள் முன்னதாக இன்றே ஆரம்பித்துவிட்டார். இன்று சிறப்புவிமானத்தில் காலை சென்னையில் இருந்து தோழி சசிகலா சகிதம் புறப்பட்ட ஜெயலலிதா தூத்துக்குடிவாகைக்குளம் விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

அவரை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானஅதிமுகவினர் வரவேற்றனர்.

வாகைக் குளம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஆறுமுகனேரி அருகே சாகுபுரத்தில் உள்ள தரங்கதாராகெமிக்கல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுசுக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் சென்றனர்.

ஜெயலலிதாவின் இந்த வருகையை ஒட்டி இந்த கெஸ்ட் ஹவுஸ் கடந்த ஒரு மாதமாக புதுப்பிக்கப்பட்டு வந்தது.புதிய ஏ.சிக்கள் பொறுத்தப்பட்டன. கார்பெட்டுகள் மாற்றப்பட்டு இந்த கெஸ்ட் ஹவுஸ் பளிச் ஆக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து சென்னை தலைமைச் செயலகத்துடன் ஹாட்லைன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள்செயல்பட வசதியாக அறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்காக பல லட்ச ரூபாய்செலவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கான கார்கள், ஏ.சி. வசதி கொண்ட பிரச்சார வேன் ஆகியவை ஏற்கனவே தூத்துக்குடிக்கு வந்துசேர்ந்துவிட்டன.

இன்று அதிமுக தேர்தல் பணிக் குழுவினருடன் ஜெயலலிதா தூத்துக்குடியில் ஆலோசனை நடத்துவார். புதியபிரச்சார உத்திகள் வகுக்கப்படும். மேலும் சாத்தான்குளம் தொகுதியில் பல சமூகத் தலைவர்களையும் முதல்வர்ஜெயலலிதா இன்று தூத்துக்குடியில் வைத்து சந்தித்து அவர்கது ஆதரவைக் கோர உள்ளார்.

நாளை முதல் சாத்தான்குளத்தில் ஜெயலலிதா பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். கிருஸ்துவ மக்கள் அதிகம் வசிப்பதால்அந்தந்தப் பகுதிகளின் தேவாலயங்களின் பாதிரியார்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார்.

இற்கிடையே காங்கிரசுக்கு ஆதரவாக திமுக நேரடியாக பிரச்சாரத்தில் குதிக்க ஆரம்பித்துள்ளது. நாசரேத் ஒன்றியதிமுக அலுவலகத்தில் தான் அப் பகுதியின் காங்கிரஸ் தேர்தல் அலுவலகமே அமைக்கப்பட்டுள்ளது.

திமுக லோக்கல் தலைவர்களும் காங்கிரசாருடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். தூத்துகுடிமாவட்ட திமுக செயலாளர் பெரிசாமியை காங்கிரஸ் தலைவர் சோ.பா.பாலகிருஷ்மனும். செயல் தலைவர்இளங்கோவனும் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது திமுகவினர் காங்கிரசுக்கு அனைத்து வகைகளிலும்உதவுவார்கள் என பெரியசாமி தரப்பில் இருந்து உறுதிமொழி தரப்பட்டதாகத் தெரிகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X