For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

""சாத்தான்குளத்தை "தேவன்"குளமாக மாற்றுவேன்"": கிருஸ்தவர்களை குறிவைத்து ஜெ. ஓட்டு வேட்டை

By Staff
Google Oneindia Tamil News

சாத்தான்குளம்:

ஆண்டிப்பட்டி படிப்படியாக அரசிப்பட்டியாக மாறி வருவதைப் போல சாத்தான்குளம் எனதுஆட்சியில் கடவுளின் ஆட்சி நடக்கும் "தேவன்"குளமாக மாறும் என்று முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார்.

சாத்தான்குளம் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா குதித்ததைத் தொடர்ந்து அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.

அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணத்திற்கு ஆதரவாக ஜெயலலிதா நேற்று மாலை தனதுபிரசாரத்தைத் தொடங்கினார். சிறுபான்மை மக்களான கிருஸ்தவர்களைக் குறிவைத்து அவர் நேற்றுபிரச்சாரம் செய்தார்.

அழகப்பபுரம் என்ற கிராமத்தில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார் ஜெயலலிதா. அவர்பேசுகையில்,

எந்த மதத்திற்கு எதிராகவும் நான் செயல்படவில்லை. அனைத்து மதங்களும் எனக்கு ஒன்றுதான்.யாரையும் பாரபட்சமாக நான் நினைத்ததில்லை. கட்டாய மதமாற்றச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களின்பாதுகாப்புக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம்தான்.

அதிமுக ஆட்சியில் இதுவரை மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் மதக் கலவரமோ அல்லது ஜாதிக்கலவரமோ ஏற்படவில்லை. ஆனால் கட்டாய மதமாற்றச் சட்டம் தொடர்பாக தவறான தகவல்களைக்கூறி மதக் கலவரத்தையும், ஜாதிக் கலவரத்தையும் தூண்டிவிட எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன.

கொலை செய்தாலோ அல்லது திருடினாலோதான் ஒருவரை சிறையில் போடுவார்கள். அல்லதுதூக்கில் போடுவார்கள். ஆனால் தவறே செய்யாதபோது எதற்குப் பயப்பட வேண்டும்?அதுபோலத்தான் கட்டாய மதமாற்றச் சட்டம். தவறு செய்யவில்லை என்றால் இந்தச் சட்டத்தைப்பார்த்து எதற்காகப் பயப்பட வேண்டும்?

சாத்தான்குளம் தொகுதி பல ஆண்டுகளாகவே பின் தங்கிய நிலையில் இருந்து வருகிறது.ஆண்டிப்பட்டியை அரசிப்பட்டியாக மாற்ற நான் உறுதி பூண்டுள்ளதைப் போல"சாத்தான்"குளத்தையும் "தேவன்"குளமாக (கடவுளின் பூமியாக) மாற்ற சூளுரைத்துள்ளேன். அதைவாக்காளர்கள் புரிந்து கொண்டு அதிமுகவுக்கே ஓட்டுப் போட வேண்டும்.

சாத்தான்குளம் தொகுதியில் இத்தனை காலமாக எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள் தொகுதியின்வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை. இதனால் தொகுதியில் எந்த வளர்ச்சியும் ஏற்படாமல் காலம்காலமாகப் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது.

இந்த அவல நிலைக்கு அதிமுக ஆட்சி முடிவு கட்டும். வேட்பாளர் நீலமேகவர்ணம் இந்த மண்ணின்மைந்தர். எனவே தொகுதி மக்களுக்கு எப்போதுமே அவர் உழைக்கத் தயாராக இருப்பார். கூப்பிட்டகுரலுக்கு ஓடி வருவார். உங்களுடனேயே இருப்பார். எனவே உங்கள் வீட்டுப் பிள்ளையானநீலமேகவர்ணத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார் ஜெயலலிதா.

பெரும்பாலும் கிருஸ்தவர்களைக் குறி வைத்தே அவர் ஓட்டு வேட்டையாடினாலும் கூட,கிருஸ்தவர்கள் அதிகமாக வாழும் கிராமங்களில் அதிகம் பேசுவதை ஜெயலலிதா தவிர்த்தார்.இவ்வாறு நேற்று மட்டும் ஏழு கிராமங்களை அவர் தவிர்த்துள்ளார்.

நேற்று முன்தினம் ஓட்டுக் கேட்பதற்காக சில அமைச்சர்கள் சர்ச்சுகளுக்குச் சென்றுள்ளனர். ஆனால்தேவாலயத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று கூறி அங்கிருந்த பாதிரியார்களும்,மக்களும் அமைச்சர்களை விரட்டாத குறையாக அங்கிருந்து வெளியேற்றினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா இரவு வரை 20க்கும் மேற்பட்டகிராமங்களில் பிரசாரம் செய்தார். வேனுக்குள் அமர்ந்தவாறே ஜெயலலிதா பேசினார். பெரும்பாலும்எழுதி வைத்திருந்ததையே பேசினார்.

அழகப்பபுரத்தில் ஓரளவு கூட்டமே கூடியிருந்தது. ஆனால் போகப் போகக் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது.

வரும் 22ம் தேதி வரை (20ம் தேதி மட்டும் ஓய்வு நாள்) ஜெயலலிதா சாத்தான்குளத்தை சுற்றியுள்ளகிராமங்களில் தீவிரப் பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்தியாவில் எந்த ஒரு முதல்வரும் இதுவரை ஒருஇடைத் தேர்தலுக்காக இத்தனை நாட்கள் பிரச்சாரம் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X