கேரள போலீஸ் தாக்குதல்: கருணாநிதி கடும் கண்டனம்
சென்னை:
தமிழக விவசாயிகளையும், நிருபர்களையும் தாக்கிய கேரள போலீஸார் மீது உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் ஏ.கே. ஆண்டனிக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார்.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டி வரும் அணையைப் பார்வையிடுவதற்காக தமிழகவிவசாயிகளும், நிருபர்களும் அம்மாநிலத்தில் உள்ள முக்காலி பகுதிக்குச் சென்றுள்ளனர்.
ஆனால் அவர்களைத் தடுத்து மோசமான வார்த்தைகளால் திட்டிய கேரள போலீசார், பின்னர்ரெளடிகளின் உதவியுடன் அவர்கள் மீது சராமாரியாகத் தாக்குதல்களும் நடத்தினர். இதில் பலதமிழக விவசாயிகளும் நிருபர்களும் பலத்த காயமடைந்தனர்.
தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள்நடந்து வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக விவசாயிகள் மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் சிலர் முக்காலி பகுதியில் கேரள காவல்துறையினராலும் ரெளடிகளாலும் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.
இந்த விஷயத்தில் கேரள முதல்வர் தலையிட்டு தவறு செய்த போலீசார் மீது உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆண்டனி உறுதியளிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.


