நர்சிங்: கேரள மாணவிகளை ராகிங் செய்த கேரள மாணவிகள்
திருவனந்தபுரம்:
தர்மபுரி அருகே நர்ஸிங் கல்லூரியில் படித்த 4 கேரள மாணவிகள் அங்கு சீனியர் மாணவிகளின்ராகிங் கொடுமை தாங்க முடியாமல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு தங்கள் சொந்த ஊருக்குத்திரும்பியுள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து கட்ட வேண்டிய கட்டணத்தைச் செலுத்தினால்தான், கல்லூரியைவிட்டே வெளியே விடுவோம் என்று அந்த நர்ஸிங் கல்லூரி நிர்வாகமும் கூறிவிட்டதால், தர்மபுரிமாவட்ட கலெக்டர் மற்றும் ஒரு உயர் போலீஸ் அதிகாரி ஆகியோர் உதவியுடன் மிகுந்தசிரமப்பட்டு அம்மாணவிகள் திருவனந்தபுரம் வந்து சேர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த நான்கு மாணவிகளும் இன்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் பெரியநாஹள்ளியில் உள்ள நர்ஸிங் கல்லூரியில் கடந்த ஆண்டுடிசம்பர் மாதம் நாங்கள் சேர்ந்தோம்.
ஒவ்வொருவரும் ரூ.60,000 கட்டணம் கட்டி நர்ஸிங் படிப்பில் சேர்ந்தோம். ஆனால் ரூ.48,500க்குமட்டுமே கல்லூரி நிர்வாகம் ரசீது கொடுத்தது.
இருந்தாலும் எப்படியாவது படித்து முடித்துவிட வேண்டும் என்பதற்காக இதைப் பொறுத்துக்கொண்டோம்.
ஆனால் அதன் பின்னர்தான் எங்களுக்கு ராகிங் கொடுமைகள் ஆரம்பித்தன. கேரளாவைச் சேர்ந்தசில சீனியர் மாணவிகள் எங்களை அடிக்கடி தங்கள் அறைக்கு வரச் சொல்லி அங்கு வெளியேசொல்ல முடியாத அளவுக்கு ராகிங் செய்து எங்களைக் கொடுமைப்படுத்தினர்.
இது தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் எத்தனையோ முறை புகார் கொடுத்தும் அவர்கண்டுகொள்ளவே இல்லை.
நிலைமை மிகவும் முற்றிய பிறகுதான் நாங்கள் நால்வரும் படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு வெளியேற முடிவு செய்தோம். ஆனால் மூன்று ஆண்டுக்கான கட்டணத்தையும்செலுத்தினால்தான் வெளியே விடுவோம் என்று கல்லூரி நிர்வாகமும் கூறி எங்களை மிரட்டியது.
எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிறகு ஒரு வழியாக எங்கள் நிலை பற்றி அறிந்துதர்மபுரி மாவட்ட கலெக்டரும், ஒரு போலீஸ் அதிகாரியும் கல்லூரிக்கு வந்து எங்களைக்காப்பாற்றி ஊர் திரும்ப உதவினர்.
எங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும்கேரள முதல்வர் ஆண்டனி ஆகியோருக்குப் புகார் மனுக்களை அனுப்பியுள்ளோம் என்றுஅம்மாணவிகள் கூறினர்.


