அமெரிக்காவில் பனிப் புயல்: 28 பேர் பலி
நியூயார்க்:
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் பெரும் பனிப்பொழிவும் பனிப் புயலும் வீசுகிறது. இதுவரை இந்த மிகக்கடுமையான பனிப் பொழிவுக்கு 28 பேர் பலியாகியுள்ளனர்.
சாலைகள், வீடுகள், கட்டடங்களில் ஒன்றரை மீட்டர் உயரத்துக்கு பனி மூடியுள்ளது.
ஓகியோ பள்ளத்தாக்கில் பனிப் புயல் வீசியதில் 28 பேர் பலியாகியுள்ளனர். பல பகுதிகளில் பனியினால்நிலச்சரியும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் சரிந்துள்ளன.
இதனால் மின் வினியோகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 லட்சம் வீடுகள் மின்சாரம் இல்லாமல்திண்டாடி வருகின்றன.
பென்சில்வேனியாவில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் காரில் வந்து அமர்ந்து ஹீட்டரைப் போட்டு பல மணிஉட்கார்ந்திருந்த முதியவர் காரிலேயே பலியானார். காருக்குள் அக்ஸிஜன் வர வழியில்லாத அளவுக்கு அதைப்பூட்டிவிட்டு ஹீட்டரைப் போட்டதால் கார்பன் மோனாக்சைட் வாயு தாக்கி இறந்தார்.
நியூ இங்கிலாந்து, மசாசூசெட்ஸ் ஆகிய பகுதிகளும் இந்த பனியின் கொடுமைக்குத் தப்பவில்லை. லோகான்சர்வதேச விமான நிலையத்தை 43 செ.மீ. அளவுக்கு பனி மூடியுள்ளது. போஸ்டன் உள்ளிட்ட பகுதிகளில் மேலும்பனிப் பொழிவு இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் வாஷிங்டன், பால்டிமோர், பிலடெல்பியா, நியூயார்க் ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்கள்மூடப்பட்டுவிட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விமானநிலையத்திலேயே தங்கிய பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் கம்பளிகளை வழங்கின.
ரயில், பஸ் சேவைகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளன. கென்டகி, மசாசூசெட்ஸ் போன்ற நகரங்களில் தேவையில்லாதபயணத்தைத் தவிர்க்குமாறும், வாகனங்களுடன் சாலைகளுக்கு வர வேண்டாம் என மக்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புளோரிடா விமான நிலையத்திலும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர்.


