For Daily Alerts
Just In
ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே பாலம்: இந்தியா, இலங்கை ஒப்புதல்
டெல்லி:
தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே கடல் வழிப் பாலம்அமைப்பது தொடர்பாக இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம்ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையிலான இந்தப் பாலத்திற்கான ஆய்வுப் பணிகளைத் துவங்கமட்டுமே தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆய்வுப் பணிகள் முடிந்த பின்னரே சுமார் 20 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாலத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சரான பி.சி. கண்டூரி நேற்று இதைநாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கும் இடையிலான கப்பல்போக்குவரத்து விரைவில் துவங்குவதற்குத் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


