For Daily Alerts
Just In
விமானம் விழுந்து பாக். விமான படை தளபதி பலி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியதில் அந்நாட்டு விமானப் படையின்தலைவர் முஷாப் அலி மிர் உள்பட அதில் சென்ற 17 ராணுவ, விமானப் படை அதிகாரிகள்உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இன்று காலை இந்த விபத்து நடந்தது. போக்கர் ரக ராணுவபோக்குவரத்து விமானத்தில் சக்லாலா என்ற இடத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் கோகாட் என்றஇடத்துக்கு முஷாப் அலி மிர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இந்த விபத்து நடந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு பாகிஸ்தானின் ராணுவ மீட்புவிமானங்கள் விரைந்துள்ளன.


