காங். வேட்பாளர் மீது அமைச்சர் தாக்குதல்: சாத்தான்குளத்தில் பதற்றம், கடைகள் அடைப்பு
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும்அதிமுகவினரும் உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். இதையடுத்து அங்கு பெரும் பதற்றம்ஏற்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
சாத்தான்குளத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல்பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.
இந் நிலையில் இன்று பிற்பகல் சாத்தான்குளம் பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் தொண்டர்களுடன்வேட்பாளர் மகேந்திரன் ஊர்வலமாகச் சென்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போதுமகேந்திரனின் ஜீப்பில் இருந்த ஒலிப்பெருக்கியில் நாட்டைக் காக்கும் கை.. இது வீட்டைக் காக்கும்கை பாடல் ஒலிபரப்பப்பட்டது.
கருமேனி என்ற இடத்தை காங்கிரஸ் வேட்பாளரும் தொண்டர்களும் நெருங்கியபோது எதிர் திசையில் அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன், சில கார்களில் அங்கு வந்தார். நேராக காங்கிரசார் மத்தியில் வந்த அவர்,எங்க தலைவர் எம்.ஜி.ஆர். பாடலை நீங்கள் எப்படி உபயோக்கிலாம் என்று கேட்டார்.
இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளருக்கும் அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.காங்கிரஸ் வேட்பாளருடன் வந்த திமுகவினர் தலையிட்டு அதிமுகவினரை விலகிப் போகுமாறுஎச்சரித்தனர். இயைடுத்து அதிமுக மற்றும் திமுக- காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்களுக்கும்இடையே கை கலப்பு ஏற்பட்டது. உடனே அமைச்சருடன் வந்தவர்கள் தங்கள் கார்களை நோக்கிஓடினர்.
கார்களில் இருந்து உருட்டுக் கட்டைகளை எடுத்துக் கொண்டு காங்கிரசார் மீது பாய்ந்தனர். அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணனும் ஒரு கட்டையை எடுத்து காங்கிரஸ்காரர்களை அடித்தார். அதைத் தடுத்தகாங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனையும் அமைச்சரே உருட்டுக் கட்டையால் அடித்ததாகவும்கூறப்படுகிறது.
இந் நிலையில் அதிமுகவினருடன் வந்த ரெளடிக் கும்பல் அருகில் இருந்த கடைகளையும் தாக்கஆரம்பித்தது. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இரு தரப்பினருக்கும் இடையே நடந்தபயங்கர மோதலில் கல்வீச்சும் நடநத்து.
மகேந்திரனின் கார் டிரைவர் சண்முகசுந்தரத்தையும் அமைச்சர் அடித்ததில் அவரது மண்டைஉடைந்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் கூறுகின்றனர்.
இத் தாக்குதலில் பல காங்கிரஸ் தொண்டர்களும் திமுக தொண்டர்களும் படுகாயமடைந்தனர்.திமுகவினர் இருந்ததால் தான் இந்த அளவோடு நிறுத்தினர். இல்லாவிட்டால் வேட்பாளரைஉயிரையே எடுத்திருப்பார்கள் காங்கிரஸார் கூறுகின்றனர்.
இச் சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள்பயந்து அடித்துக் கொண்டு ஓடினர். தகவல் அறிந்தவுடன் காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்,செயல் தலைவர் இளங்கோவன், மத்திய காங்கிரஸ் பார்வையாளர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர்சம்பவ இடத்துக்கு விரைந்து காங்கிரஸ் தொண்டர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
கடும் கோபத்தில் இருந்த இளங்கோவன் தொண்டர்களுடன் புதிய பஸ் ஸ்டாண்டு பகுதிக்குச்சென்றார். அங்கு நடுரோட்டில் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.அராஜகம் செய்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி இப்போராட்டத்தில் அவர் ஈடுபட்டார்.
காவல்துறை உயர் அதிகாரிகள் அவரை முதலில் மிரட்டிப் பார்த்தனர். ஆனால், அவர் அந்த இடத்தைவிட்டு நகர மறுத்துவிட்டார். இயைடுத்து அவருடன் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் முழுவதுமே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் தொண்டர்கள் மீது அனிதா ராதாகிருஷ்ணன்தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, எதிரில் வந்த காங்கிரஸ்தொண்டர்களை அனிதா ராதாகிருஷ்ணன் முகத்தில் அறைந்ததால் பிரச்சனை ஏற்பட்டது.
அதிமுக விளக்கம்:
அனிதா ராதாகிருஷ்ணனின் கார் செல்வதற்கு வழி கேட்டதாகவும் அதற்கு காங்கிரஸ் தொண்டர்கள்மறுத்ததாகவும் இதையடுத்துதான் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும்அதிமுகவினர் கூறுகின்றனர்.
அதன் பின்னரே அனிதா ராதாகிருஷ்ணன் காரை விட்டு இறங்கிச் சென்று போய் காங்கிரஸ்தொண்டர்களிடம் போய் பேசியதாகவும் அப்போது காங்கிரசார் தான் எங்களைத் தாக்கினார் என்றும்அதிமுகவினர் கூறுகின்றனர்.
ரெளடிகள் விவகாரம்:
இதற்கிடையே சாத்தான்குளத்திற்கு வந்துள்ள நூற்றுக்கணக்கான வெளியூர் ரெளடிகளை உடனேஊரை விட்டு வெளியேற்றக் கோரி காங்கிரஸ் கட்சியினர் இன்று சாத்தான்குளத்தில் பெரும்போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
இன்று காலை போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளையும் கவனிக்க ஆரம்பித்தனர்.ஆனால் அதிகாரிகள் வந்து தலையிட்டு, வெளியூர்க் காரர்களை எல்லாம் உடனடியாக திருப்பிஅனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் போராட்டத் திட்டத்தைக் கைவிட்டனர்.


