பட்ஜெட்: பயணிகளை காப்பாற்றினார் ரயில்வே அமைச்சர்
டெல்லி:
2003-2004ம் ஆண்டுக்கான ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் நிதிஷ்குமார் இன்று மக்களைவையில் தாக்கல் செய்தார்.
இதில், பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதே நேரத்தில் பெட்ரோலியம், நிலக்கரி, இரும்பு, சிமெண்ட், சோப்பு போன்றவற்றின்சரக்குக் கட்டணம் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும்.
ராஜதானி, சதாப்தி ரயில்களின் கட்டணங்களைக் 10 சதவீதம் வரை குறைக்கப் போவதாகவும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலானகூட்ட நெரிசல் இல்லாத காலங்களில் ராஜதானி மற்றும் சில ரயில்களின் ஏசி பெட்டிகளின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அவர்அறிவித்தார்.
அதே போல சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனவும் அறிவித்தார். மேலும் இதுவரை 65 வயதானவர்களுக்குத் தான்முதியோருக்கான கட்டண சலுகை தரப்பட்டு வந்தது. இந்த வயது வரம்பு 60 ஆகக் குறைக்கப்படும் என்றும் கூறினார்.
புற்றுநோய் மற்றும் ரத்தப் போக்கு நோய், இருதய நோய்களால் தாக்கப்பட்ட பயணிகளுக்கு 75 சதவீதம் வரை கட்டணம் குறைக்கப்படும்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அமைச்சர் நிதிஷ்குமார் கூறியதாவது:
இந்த ஆண்டில் 50 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். 24 ரயில்களின் தூரம் நீட்டிக்கப்படும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் அதற்காகசிகிச்சை பெற வெளியூர்களுக்குப் பயணம் செய்தால் அவர்களுக்கும் 75 சதவீதம் வரை கட்டண சலுகை தரப்படும்.
டெல்லி, கொல்கத்தா ரயில் நிலையம் பிரம்மாண்டமானவையாக விரிவுபடுத்தப்படும். ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதைத்தடுக்க ஆன்டி-கொலிசன் கருவிகள் பொறுத்தப்படும்.
விபத்துகளின்போது அதிக உயிர்ச் சேதம் ஏற்படாமல் தடுக்க ரயில் பெட்டிகளின் வடிவமும், உள் பக்க அமைப்பும் மாற்றி அமைக்கப்படஉள்ளன. விபத்துக்களின்போது மேலும் பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறுவதைத் தடுக்க டைட்-லாக்குகள் பொறுத்தப்படும்.
நாடு முழுவதும் இந்த ஆண்டில் 225 தூரத்துக்கு 9 புதிய ரயில் தடங்கள் ஏற்படுத்தப்படும். கடந்த ஆண்டில் ரயில் பயணிகளின்எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துவிட்டது. இந்த ஆண்டு அது 3 சதவீதம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு 5,117மில்லியன் பேர் ரயில்களில் பயணம் செய்வர். இதன்மூலம் ரூ. 13,620 கோடி வருமானம் கிடைக்கும்.
இந்த ஆண்டை பயணிகள் திருப்தியடையும் ஆண்டாக ரயில்வே அறிவிக்கும். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சுகாராத்தைமேம்படுத்த அதிக நிதி செலவிடப்படும். இதில் தனியாரும் ஈடுபடுத்தப்படுவர்.
நிருபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டண சலுகை ராஜதானி, சதாப்தி ரயில்களுக்கும் நீட்டிக்கப்படும். ரயில்வே பாதுகாப்புப் படையில்கூடுதலாக 3,500 பேர் சேர்க்கப்படுவர். நாடு முழுவதும் 5,400 கி.மீ. தூரத்துக்கு புதிய தண்டவாளங்கள் மாற்றப்படும்.
மும்பை மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்படும். சரக்குக் கட்டணம் 8 சதவீதம் வரை குறைக்கப்படும்.
இந்த ஆண்டில் ரயில்வேக்கு ரூ. 43,445 கோடி வருமானம் கிடைக்கும். இதில் 64 சதவீதம் சரக்குக் கட்டணம் மூலம் கிடைக்கும். ஏ.சி.மற்றும் முதல் வகுப்புப் பயணிகள் மூலம் ரூ. 2,603 கோடி வருவாய் கிடைக்கும். இரண்டாம் வகுப்புக் கட்டணம் மூலம் ரூ. 10,584 கோடிவசூலாகும். பிற சேவைகள் மூலம் ரூ. 1,020 கோடி கிடைக்கும்.
தினந்தோறும் நாடு முழுவதும் இயக்கும் 8,500 ரயில்களில் தினமும் 1.3 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.
ரயில்வேயில் காலியாக உள்ள 20,000 குரூப் டி பதவிகள் நிரப்பப்படும் என்றார் நிதிஷ்குமார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வருவதால் கட்டண உயர்வு கடுமையாக இருக்கக்கூடாது என அமைச்சரைச் சந்தித்த பா.ஜ.க. தலைவர்கள் சமீபத்தில் வலியுறுத்தினர். இதை நிதிஷ்குமார் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதையேஇந்த பட்ஜெட் காட்டுகிறது.
எப்படியோ மக்களை வதைக்காத பட்ஜெட் போட்ட நிதிஷ்குமாரை பாராட்டியே ஆக வேண்டும்.


