பட்ஜெட்: பெட்ரோல் விலை உயர்வு- சிறிய வருமான வரி சலுகை
டெல்லி:
மத்திய நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங் 2003-04ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்றுநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சராக ஜஸ்வந்த் சிங் பொறுப்பேற்ற பின் அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது.
ஒரு சாதாரண மனிதனின் பாக்கெட்டில் அதிகமான பணம் இருக்கும் வகையிலும், அவனுடையமனைவியின் கையிலும் போதுமான அளவுக்கு பணம் புழங்கும் வகையிலும் இந்த பட்ஜெட்இருக்கும் என்று ஏற்கனவே சிங் தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த பட்ஜெட்டும் பொதுமக்களைப் பெரிய அளவில் பாதிக்காத அளவிலேயே உள்ளது.ஏழ்மையை ஒழிக்கவும், விவசாயம் மற்றும் தொழில் துறைகளில் முன்னேற்றம் ஏற்படுத்தவும் இந்தபட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துகொண்டே வருகிறது என்று கூறுவதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பின்னர் சிங் நிருபர்களிடம் கூறினார்.
பட்ஜெட் ஹைலைட்ஸ்:
ரூ.30,000 முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு அடிப்படை வரிக் கழிவு (standarddeduction) 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம்பெறுபவர்களுக்கு ரூ.20,000 வரை வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.40,000 கோடி செலவில் நாடு முழுவதும் 48 புதிய சாலைகள் அமைக்கும் பணிகள்மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த செலவுக்காக பெட்ரோல் மீது லிட்டருக்கு 50 பைசா வரிவிதிக்கப்படுகிறது. டீசல் மீது ரூ. 1.50 உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 கிராமுக்கு ரூ. 100 ஆகக்குறைக்கப்பட்டுள்ளது. முதலில் இது ரூ. 250 ஆக இருந்தது.
2003-04ம் நிதி ஆண்டில் மொத்தச் செலவு ரூ.4,38,795 கோடி என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவற்றில் ரூ.1,20,974 கோடி திட்டப் பணிகளுக்காக செலவழிக்கப்படும்.
நாட்டின் பாதுகாப்புக்கான செலவுகள் 5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.ரூ.8.5 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் பெறுபவர்கள் 10 சதவீதத் தொகையை பாதுகாப்பு உபவரியாக செலுத்த வேண்டும்.
கார், சைக்கிள், ஏ.சி., டயர், பொம்மைகள் மீதான 24 சதவீத அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.இதனால் இவற்றின் விலைகள் குறையும்.
55 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்காக லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் புதியமாதாந்திர ஓய்வூதிய பாலிசியை அறிமுகப்படுத்தவுள்ளது.
உடல் ஊனமுற்றவர்களுக்குத் தேவைப்படும் உபகரணங்களான காது கேளா கருவிகள், சக்கரநாற்காலிகள், நடப்பதற்கு உதவும் கருவிகள், மூன்று சக்கர வாகனங்கள், செயற்கை கால்கள்ஆகியவற்றுக்கான சுங்க வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஒரு குழந்தைக்கு ரூ.12,000 வீதம் இரண்டு குழந்தைகளின் கல்விக்காகச் செலவழிக்கும்பெற்றோர்கள் மற்றும் கார்டியன்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
அதே போல் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் சில இறக்குமதி செய்யப்படும் மருந்துப்பொருட்களுக்கு சுங்கத் தீர்வைகள் குறைந்துள்ளன.
தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான வரிச் சலுகைகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
மின் உற்பத்தித் திட்டங்கள், நலத் திட்டஙகள், விவசாயத் திட்டங்களுக்கு பெரும் ஊக்கம்தரப்படவுள்ளது.


