இரண்டு "எமன்களின்" மோதலில் 6 வயது சிறுமி படுகாயம்
சென்னை:
ஏகப்பட்ட மின்னணு சாதனங்களை ஏற்றிக் கொண்டு படுவேகமாக வந்த மீன்பாடி வண்டி பள்ளிச்சிறுமிகளை ஏற்றி வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியதில் 6 வயது சிறுமி படுகாயமடைந்தாள்.
சென்னை நகரின் மிகக் கொடுமையான வாகனமாகக் கருதப்படும் மீன்பாடி வண்டிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து அந்த வண்டிகள் ஓடத்தான் செய்கின்றன.
குறிப்பாக வட சென்னையில் இந்த வண்டிகளை தடை செய்யவே முடியவில்லை. மீன்களைமட்டுமே ஏற்றிச் செல்ல முன்பு பயன்படுத்தப்பட்ட இந்த வண்டிகள் தற்போது என்னென்னபொருட்களை ஏற்றிச் செல்வது என்ற வரையறையே இல்லாமல் பலவித பயன்பாட்டுக்கும்உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செங்குன்றம் பகுதியில் ஒரு விபத்து நடந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருஆட்டோவில் 3 பள்ளிச் சிறுமிகள் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதுஅவ்வழியாக ஒரு மீன்பாடி வண்டி மின்னணுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு படுவேகத்துடன்வந்தது.
வேகமாக வந்த அந்த வண்டி ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ குட்டிக்கரணம் போட்டு தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. இதில் கீர்த்திகா என்ற சிறுமி படுகாயமடைந்தாள்.
தோள்பட்டை, கை மற்றும் முகத்தில் அந்தச் சிறுமிக்குப் படுகாயங்கள் ஏற்பட்டன. இதையடுத்துஉடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு அந்தச் சிறுமி கொண்டு செல்லப்பட்டாள்.மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தையடுத்து மீன்பாடி வண்டியை ஓட்டி வந்த குமார் என்பவரை வில்லிவாக்கம்போலீஸார் கைது செய்தனர்.
மீன்பாடி வண்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை சரியாக அமல்படுத்தத் தவறியதற்காகவில்லிவாக்கம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இன்ஸ்பெக்டர் அப்துல் ஹமீது ஆயுதப்படைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.


