3 நாட்களுக்கு ஜெ. முழு ஓய்வு: துணை ஜனாதிபதியை வரவேற்க வரவில்லை
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா முதுகு வலி காரணமாக முழு ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள்அறிவுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்த துணை ஜனாதிபதி பைரோன் சிங்ஷெகாவத்தை வரவேற்கச் செல்லவில்லை.
துணை ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் ஷெகாவத் முதல் முறையாக நேற்று தமிழகத்திற்குவந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை தமிழக அரசின் சார்பில்அமைச்சர்கள் வரவேற்றனர்.
ஆனால் முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதா நேற்று ஷெகாவத்தை வரவேற்பதற்கு வரவில்லை.இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஷெகாவத்தை வரவேற்க விமான நிலையத்திற்குச் செல்வதற்கு ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார்.ஷெகாவத் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக வருவதால் அவரை வரவேற்று வாழ்த்துச் சொல்லஆர்வமாகவும் இருந்தார்.
ஆனால் சமீபத்தில் சாத்தான்குளம் இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் தீவிர சுற்றுப் பயணம்மேற்கொண்டிருந்ததால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த அவருடைய முதுகுத் தண்டில் மேலும்பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவருக்கு கடந்த ஒரு வாரமாக முதுகு வலி இருந்து வந்தது.
இதனால் சாத்தான்குளத்தில் இருந்து திரும்பியவுடன் அவரை குறைந்தது நான்கு நாட்களுக்காவதுமுழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
ஆனாலும் விழுப்புரம் மாவட்ட அரசு விழா ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாலும், சுமார்25,000 மக்கள் இதனால் பலன் பெறுவார்கள் என்பதாலும், தன் மோசமான உடல் நிலையையும்பொருட்படுத்தாமல் அந்த விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்குச் சென்று வந்ததால் அவருடைய முதுகுத் தண்டு பிரச்சனை மேலும் அதிகமாகியது.அடுத்த மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள்அறிவுறுத்தினர்.
இதனால் நேற்று முதல் மூன்று நாட்களுக்கான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஜெயலலிதா ரத்து செய்துவிட்டார்.
அதனால்தான் நேற்று ஷெகாவத் சென்னை வந்தபோது அவரை வரவேற்க முதல்வரால் விமானநிலையத்திற்குச் செல்ல முடியாமல் போயிற்று என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.


