For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செப்டம்பர் 11: பாகிஸ்தானில் 3 அல்-கொய்தாவினர் கைது

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையமுக்கியக் குற்றவாளியான ஒரு அல்-கொய்தா தீவிரவாதி உள்பட 3 பேர் பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2001ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கட்டடங்களை,கடத்தப்பட்ட விமானம் மூலம் தகர்த்து தரைமட்டமாக்கினர் ஒசாமா பின் லேடன் தலைமையிலானஅல்-கொய்தா தீவிரவாதிகள்.

உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தப் பயங்கரமான சம்பவத்தில் சுமார் 4,000 பேர்கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் தொடர்புடைய அல்-கொய்தா தீவிரவாதிகளை அமெரிக்க உளவுத் துறைதீவிரமாகத் தேடி வந்தது. ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில் இந்தத் தாக்குதலில் தொடர்புடைய காலித் ஷேக் முகமது என்ற அல்-கொய்தாதீவிரவாதி பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏவுக்குத் தகவல்கிடைத்தது. செப்டம்பர் 11 தாக்குதலுக்குத் திட்டம் போட்டவனே இவன்தான்.

இஸ்லாமாபாத்துக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்அடிப்படையில் சி.ஐ.ஏ. அதிகாரிகளும, பாகிஸ்தான் அதிகாரிகளும் அந்த வீட்டைச் சுற்றிவளைத்தனர்.

பின்னர் அந்த வீட்டிலிருந்து முகமது உள்பட மொத்தம் மூன்று பேரை அவர்கள் அதிரடியாகக் கைதுசெய்தனர்.

அல்-கொய்தா இயக்கத்தின் மிக மூத்த உறுப்பினர்தான் முகமது என்று தெரிய வந்துள்ளது.செப்டம்பர் 11 தாக்குதலைத் துல்லியமாக நடத்த திட்டமிட்டவனே இவன்தான் என்றும் தெரிகிறது.

குவைத்தில் பிறந்த பாகிஸ்தானியனான இவன் தலைக்கு 25 மில்லியன் டாலர்களை அமெரிக்காநிர்ணயித்திருந்தது.

முகமதுவுடன் பிடிபட்ட மற்றொருவனின் பெயர் அகமது அப்துல் குவாதூஸ். ஜமாத்-ஏ-இஸ்லாமிஎன்ற பாகிஸ்தான் மத அமைப்பின் தீவிர உறுப்பினரான இவனும் அந்நாட்டைச் சேர்ந்தவன்தான்.மற்றொருவன் பெயர் விவரம் தெரியவில்லை.

முகமது பிடிபட்டதைத் தொடர்ந்து பின் லேடன் இருக்குமிடம் தொடர்பான மேலும் பல தகவல்கள்தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X