கங்குலிக்கு வாஜ்பாய் வாழ்த்து கடிதம்
டெல்லி:
இதற்கிடையே பாகிஸ்தானைத் தோற்கடித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ்கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் வாஜ்பாய் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வெற்றி கொண்டதற்காக உங்களை நான்பாராட்டுகிறேன்.
அணியில் உள்ளவர்களின் ஒற்றுமையும் உற்சாகமும்தான் இந்த வெற்றியை அடையச் செய்துள்ளது.பாகிஸ்தானுடன் நீங்கள் அனைவரும் ஆடிய ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.
இதே சுறுசுறுப்புடன் நீங்கள் தொடர்ந்து ஆடுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உலகக்கோப்பையை நீங்கள் வென்று வர அன்போடு வாழ்த்துகிறேன் என்று அந்தக் கடிதத்தில் வாஜ்பாய்கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரிய செய்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் எம்.பியுமான ராஜிவ்சுக்லா மூலம் இந்தக் கடிதம் கங்குலிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் விளையாடிவரும் கங்குலியிடம் இந்தக் கடிதம் ஒப்படைக்கப்படும்.


