சாத்தான்குளத்தில் ரூ. 17 கோடி செலவிட்டது அதிமுக: இள ங்கோவன்
சென்னை:
சாத்தான்குளத்தில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் ரூ.17 கோடி வரைசெலவு செய்துள்ளனர். எனவே அந்தத் தேர்தலை செல்லாதது என தேர்தல் கமிஷன் அறிவிக்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சாத்தான்குளத்தில் அதிமுகவினரின் பண பலமும், அதிகார துஷ்பிரயோகமும் சேர்ந்துதான் அக்கட்சிவேட்பாளரை வெற்றி பெறச் செய்துள்ளது. அந்தத் தொகுதியில் வாக்குகளை வாங்க ரூ. 17கோடியை அதிமுகவினர் செலவிட்டனர்.
இவை இரண்டும் தடுக்கப்பட்டிருந்தால் அங்கு நிச்சயம் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்றிருக்கும்.
பல வாக்குச் சாவடிகளில் அதிமுகவினர் கள்ள ஓட்டுக்கள் போட அமைச்சர் வளர்மதியும் அதிமுகஎம்.பியான மைத்ரேயனும் வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இது தேர்தல் கமிஷனுக்கும் நன்றாகத்தெரியும்.
எனவே கள்ள ஓட்டுக்கள் மூலம் அவர்கள் பெற்ற வெற்றி செல்லாது என்று தேர்தல் கமிஷன்அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
எனவே சாத்தான்குளம் தேர்தல் முடிவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நிச்சயம் வழக்கு தொடரப்படும்.அத்தொகுதியில் போட்டியிட்டவரும் வழக்கறிஞருமான மகேந்திரன் வரும் 6ம் தேதி சென்னைக்குவருவார். அவர் வந்த உடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.
அடுத்த 10 நாட்களில் காங்கிரஸ் செயற்குழுவும், பொதுக் குழுவும் கூடவுள்ளன. அப்போதுஅதிமுகவினரின் அராஜகப் போக்கு குறித்து விவாதிக்கப்படும். அதிமுக அரசுக்கு எதிராகப்போராட்டங்கள் நடத்துவது குறித்து இந்தக் கூட்டங்களில் முடிவு செய்யப்படும் என்றார்இளங்கோவன்.
சாத்தான்குளத்தில் அதிமுக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும் ஏற்கனவேகூறியுள்ளனர் என்பது நினைவுகூறத்ததக்கது.


