அதிமுகவின் தேர்தல் தில்லுமுல்லுகளை எதிர்த்த தூத்துக்குடி கலெக்டர் அதிரடி மாற்றம்
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலின்போது அதிமுகவினரை தேர்தல் தில்லுமுல்லுகள் செய்ய விடாமல்தடுத்த தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தியாகராஜன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு மாற்றுப் பதவி ஏதும் கொடுக்கப்படவில்லை.
அவர் பந்தாடப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் சாத்தான்குளம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல்அதிகாரியாகவும் தியாகராஜன் பணியாற்றினார். தேர்தல் கமிஷனின் உத்தரவை ஏற்றுவெளியூர்காரர்களை அவர் வெளியேற்றினார். அதில் சில அதிமுகவினரும் அடக்கம்.
மேலும் தேர்தல் நேரத்தில் தொகுதியின் அதிமுக பொறுப்பாளரான அனிதா ராதாகிருஷ்ணன்சொன்ன சில உத்தரவுகளை ஏற்க கலெக்டர் மறுத்துவிட்டார். அவை தேர்தல் விதிகளுக்குமுரணானதாக இருப்பதாகக் கூறிவிட்டார்.
கடந்த மார்ச் 1ம் தேதி சாத்தான்குளம் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைநடைபெற்றது. அப்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மையத்திற்குள் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனை உள்ளே அனுமதிக்க தேர்தல் அதிகாரிகள் மறுத்தனர். இதற்கு கலெக்டர் தான்காரணம் என்று முதல்வரிடம் புகார் சொன்னார் அமைச்சர்.
முன்னதாக பிரச்சாரத்தின்போது விதிமுறைகளை மீறி முதல்வர் ஜெயலலிதா மக்களுக்குவாக்குறுதிகளை அள்ளி வீசியது குறித்து தியாகராஜன்தான் தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல்அனுப்பியதாகவும் அதிமுகவினர் அவர் மீது ஜெயலலிதாவிடம் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து நேற்று சென்னையில் ஜெயலலிதாவைச் சந்தித்து அவர் காலில் விழுந்த அனிதாராதாகிருஷ்ணன் கலெக்டர் மீது புகார் கூறினார். அருகிலிருந்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட மற்றஅமைச்சர்களும் ஜெயலலிதாவிடம் புகார்களை அடுக்கினர்.
இதையடுத்து தேர்தல் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதால் தியாகராஜனை திடீரெனஇடமாற்றம் செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டார். அவருக்குப் பதிலாக காஞ்சிபுரம் மாவட்டக்கலெக்டர் கே.ராஜாராமன் தூத்துக்குடி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தியாகராஜனுக்கு வேறு பொறுப்போ, பதவியோ வழங்கப்படவில்லை. அவர் காத்திருப்போர்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதி கண்டனம்:
கலெக்டர் தியாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு கருணாநிதி கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
சாத்தான்குளம் தொகுதி இடைத் தேர்தலில் விதிமுறைகள் மீறப்பட்டதை மறைத்து தமிழக அரசின்தலைமைச் செயலாளரே தேர்தல் கமிஷனிடம் அண்டப் புளுகு புளுகிார். தலைமைச் செயலாளரேஅரசுக்கு விசுவாசமாக ஜனநாயகத்தை காலில் மிதித்துக் கொன்றார். அப்படி இருக்கும்போது இந்தகலெக்டருக்கு மட்டும் என்ன வந்தது?
இவர் ஏன் அமைச்சர்கள் சொன்னபடி அதிமுகவை அனுசரித்துப் போகவில்லை.
விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகத்துக்குள்ளேயே அத்துமீறி அதிமுக பேனர்கள் வைக்க அனுமதிஅளித்த அம்மாவட்ட கலெக்டர் பிழைக்கத் தெரிந்தவர். ஆனால், நீதி, நியாயம், நேர்மையுடன் தான்நடப்பேன் என்று அதிமுக பக்கம் சாயாத தூத்துக்குடி கலெக்டர் பிழைக்கத் தெரியாதவர்.
நேர்மையான அதிகாரிகளை எல்லாம் இப்படிப் பந்தாடினால் அப்புறம் யார்தான் நேர்மையாகச்செயல்படுவார்கள் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.


