For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடைச் சரக்கு ஆகும் இன்ஜினியரிங் கல்வி: இனி எல்லாம் பணமே!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அந்தந்தக் கல்லூரி நிர்வாகங்களே நிரப்பிக் கொள்ளலாம் என தமிழக அரசுகூறியுள்ளது. இதன்மூலம் கல்லூரிகளுக்கு ஆதரவாகவும் மாணவர்களுக்கு எதிரான நிலையையும் அரசு எடுத்துள்ளது.

இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுவுைத் தேர்வு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

நிர்வாகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட சீட்களிலும் 50 சதவீதம் ப்ரீ சீட் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இனி இந்த ப்ரீ சீட் இருக்காது. தனியார் கல்லூரி நிர்வாகத்தினரால் சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களும் இனி ஆண்டுக்கு ரூ. 30,000கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும். இதனால் 4 வருட படிப்புக்கு ஒவ்வொரு மாணவனும் குறைந்தபட்சம் கட்டணமாக மட்டும் ரூ. 1.2லட்சம் செலவு செய்ய வேண்டும் (இது தவிர தனியார் கல்லூரிகள் அடிக்கும் பகல் கொள்ளைகளான கட்டாய பஸ் பீஸ், பில்டிங் பீஸ்,ஸ்பெசல் கோச்சிங் பீஸ் போன்றவை தனி).

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பை முன் வைத்து இனி மாணவர்களை நாங்கள் தான் தேர்வு செய்வோம். அண்ணாபல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுக்குக் கட்டுப்பட மாட்டோம் என தனியார் கல்லூரி முதலாளிகள் அறிவித்தனர்.

ஆனால், இதற்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பாலகுருசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின்பெயரில் தரப்படும் சான்றிதழ்கள் இருந்தால் தான் நல்ல நிறுவனங்களில் மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். மூக்கம்மாகல்லூரி, ராக்கம்மா கல்லூரி என்று சான்றிதழ்களுடன் போனால் வேலை கிடைப்பது கடினம் என அவர் கூறியிருந்தார்.

இதனால் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகவே மாணவர்களை சேர்க்க வேண்டும், பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குக் கட்டுப்படவேண்டும், பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்கள் மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் நேற்று மாலை பாலகுருசாமியை முதல்வர் ஜெயலலிதா அழைத்துப் பேசினார். அப்போது தனியார் கல்லூரிகளில் 50 சதவீதஇடங்களை அவர்களே நிரப்பிக் கொள்ளவும் மீதமுள்ள50 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பவும்அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக ஜெயலலிதா கூறினார்.

இதை பாலகுருசாமியும் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து தமிழக உயர் கல்வித்துறைச் செயலாளர் மூலம் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளலாம். மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்குஅண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வு மூலம் தமிழக அரசு மாணவர்களைத் தேர்வு செய்யும்.

தங்கள் விருப்பப்படி தனியார் கல்லூரிகள் 50 மாணவர்களைச் சேர்க்கும்போது இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.வெளிப்படையான, நியாயமான முறைகள் பின்பற்றப்பட வேண்டும் (இதை தனியார் கல்லூரிக்காரர்கள் நிச்சயம் செய்யப் போவதில்லை..பணம் கொடுத்தால் சீட் கொடுப்பார்கள். அவ்வளவு தான். இவர்களை மாணவர்களின் மதிப்பெண்ணைக் கூட ஒரு பொருட்டாக மதிக்கப்போவது இல்லை).

கல்விக் கட்டணத்தை அனைத்து மாணவர்களுக்கு ஒரே சீராக ஆண்டுக்கு ரூ. 30,000 வசூலிக்க வேண்டும். (இதனால் ப்ரி சீட் என்ற ஒன்றேஇருக்காது. அனைத்து மாணவர்களும் கட்டணம் செலுத்தியாக வேண்டும்).

இவ்வாறு அரசுச் செயலாளரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் இனி தனியார் கல்லூரிகள் வைத்தது தான் சட்டம் ஆகும். ஏற்கனவே பல தனியார் கல்லூரிகளில் கட்டாயம் மெஸ்சில் தான்சாப்பிட வேண்டும் என்று கூறி ஆண்டுக்கு ரூ. 15,000 வரையிலும், கட்டாயம் கல்லூரி பஸ்சில் தான் வர வேண்டும் என்று கூறி ரூ. 10,000வரை பஸ் பீசாகவும் வசூலித்து வருகின்றனர்.

அரசு ஒதுக்கீட்டில் கிடைக்கும் இடங்கள் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறைந்துவிட்டதால் இனி தனியார் பொறியியல் கல்லூரிகளில்சேர்ந்து படிக்கும் வாய்ப்பு வசதி உள்ள மாணவர்களுக்குத் தான் அதிகம் இருக்கும்.

இதற்கிடையே கட்டாயம் எங்கள் பஸ்சில் தான் கல்லூரிக்கு வர வேண்டும், கட்டாயம் மெஸ்சில் தான் சாப்பிட வேண்டும் என்றுகட்டாயப்படுத்தி ஆயிரக்கணக்கில் பணம் பறித்த திருவள்ளூர் தீன்தயாள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களில் 370 பேர் தங்களை வேறுகல்லூரிக்கு மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இவர்களுக்கு 54 கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படுவதாகவும் அரசுஅறிவித்துள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X