அல்-கொய்தாவுக்கு ஏவுகணை: அமெரிக்க இந்தியர் கைது
ஹாங்காங்:
ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா அமைப்புக்கு ஸ்டிரிங்கர் ரக ஏவுகணை வழங்கத் திட்டமிட்ட ஒரு இந்தியர்,2 பாகிஸ்தானியர்கள் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிறப்பு விமானத்தில் அமெரிக்கப்படையினர் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர்.
தோள் பட்டையில் வைத்து இந்த ஏவுகணைகளைச் செலுத்த முடியும். இந்த ஏவுகணைகளால் விமானங்கள்,ஹெலிகாப்டர்களை வீழ்த்த முடியும். ஆப்கானிஸ்தானில் ரஷ்யப் படைகளை வெல்ல இஸ்லாமியதீவிரவாதிகளுக்கு இந்த ரக ஏவுகணைகளை ஆயிரக்கணக்கில் அமெரிக்கா வழங்கியது.
இப்போது இந்த ஏவுகணைகள் உலகம் முழுவதும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடம் பரவிக் கிடக்கின்றன.இவற்றை தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து திரும்ப வாங்க பல பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவுசெய்து பார்த்தது. பண ஆசை காட்டி இவற்றைத் திரும்ப வாங்க முயன்றது. ஆனால், அனைத்து ஏவுகணைகளும்திரும்ப வந்து சேரவில்லை.
இந் நிலையில் இப்போது இந்த ஏவுகணைகள் அமெரிக்காவுக்கே பெரும் சவாலை ஏற்படுத்தி வருகின்றன.ஆப்கானிஸ்தானில் அவ்வப்போது அமெரிக்கா ஹெலிகாப்டர்களை இந்த ஏவுகணைகளைக் கொண்டு தான்தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகள் வீழ்த்தி வருகின்றனர்.
இவை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்குள் ஊருவினால் சொல்ல முடியாத அளவுக்கு பெரும் சேதம்ஏற்படும் என அஞ்சப்படுகிறது. காஷ்மீர் தீவிரவாதிகளிடம் கூட இந்த ஸ்டிரிங்கர் ஏவுகணைகள் இருப்பது கார்கில்போரின்போது உறுதியானது.
இந் நிலையில் ஸ்டிரிங்கர் ரக ஏவுகணைகளை சில தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து வாங்கி அல்-கொய்தாஅமைப்பினருக்கு வழங்க முயன்றதாக இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் இலியாஸ் அலி(வயது 55), பாகிஸ்தானியர்களான சையத் முஸ்தஜப் (54), முகம்மத் ஆபித் அப்ரிதி (29) ஆகியோர் ஹாங்காங்கில்பிடிபட்டுள்ளனர்.
இவர்களின் தீவிரவாதிகள் போன்ற போர்வையில் அமெரிக்க உளவுப் படையினர் பேசி வந்தனர். தங்களிடம்ஸ்டிரிங்கர் ஏவுகணைகள் இருப்பதாகக் கூறி இந்த மூவரிடமும் பேசினர். அப்போது 600 கிலோ ஹெராயின், 5டன் ஹாசிஸ் ஆகிய போதைப் பொருள்களைத் தருவதாகவும் அதற்குப் பதிலாக ஏவுகணைகளை வழங்குமாறும்இந்த மூவரும் கேட்டனர்.
அவற்றை அல்-கொய்தாவுக்கு வழங்குவதற்காகவே கேட்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடத்து கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே ஹாங்காங் போலீசார் உதவியுடன் எப்.பி.ஐ. இந்த மூவரையும்கைது செய்தது. ஆனால், இத் தகவல் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இவர்களை தனது நாட்டுக்குக் கொண்டு செல்ல அமெரிக்கா விரும்பியது. இதையடுத்து இவர்கள்அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந் நிலையில் நேற்று இவர்களை அமெரிக்கா கொண்டு செல்ல சிறப்பு விமானம் ஹாங்காங் வந்தது. பலத்தபாதுகாப்புடன் இவர்கள் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒசாமாவை சந்தித்த காலித்:
இதற்கிடையே சமீபத்தில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் கைதான ஷேக் காலித் முகம்மத், கைதாவதற்கு ஒருமாதத்துக்கு முன் ஒசாமா பின் லேடனை சந்தித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்கப் படைகளிடம் ஒப்படைக்கப்படும் முன் பாகிஸ்தானிய ராணுவத்தினரால் அவர் விசாரிக்கப்பட்டார்.அப்போது தான் இந்த விவரம் தெரியவந்தது. இதனால் லேடன் உயிரோடு இருப்பது திட்டவட்டமாகிவிட்டது.
அமெரிக்காவின் 25 மில்லியன் டாலர் பரிசுப் பணத்துக்கு ஆசைப்பட்டுத் தான் ஷேக் காலித்தை அவரது நண்பர்பாகிஸ்தானிடம் காட்டிக் கொடுத்தார் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் இ-மெயில் மூலம் தான்அல்-கொய்தா தீவிரவாதிகள் உலகம் முழுவதும் தொடர்பு வைத்திருந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.


