For Daily Alerts
Just In
ஆணி செருப்பு திருவிழா: வீரமணி கண்டனம்
சென்னை:
பெண்கள் மீது ஆணிச் செருப்பை அணிந்து கொண்டு நடக்கும் திருவிழாவைத் தடை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் அருகே பேச்சியூர் என்றகிராமத்தில் பெண்கள் மீது பூசாரி ஆணி அடித்த செருப்பை அணிந்து கொண்டு நடந்துள்ளார்.
இது போன்ற கொடூரமான பழக்கங்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இன்றும்காணப்படுகின்றன.
இந்த மூடப்பழக்கங்களைத் தடை செய்து மீறி இதுபோன்ற கொடூர திருவிழாக்கள் நடத்துபவர்களைஅரசு தண்டிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞர் அணியினர் முக்கிய நகரங்களில் தண்டோரா போட்டுபிரசாரம் செய்வார்கள். தேவைப்பட்டால் பொது நலன் வழக்கும் நீதிமன்றத்தில் தொடரப்படும்என்று அவ்வறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.


