ஆப்கானிஸ்தானுக்கு ஏர்பஸ்: இந்தியா அன்பளிப்பு
டெல்லி:
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 3வது ஏர்பஸ் ஒன்றை இன்று அன்பளிப்பாக வழங்கியது. மேலும்அந்நாட்டில் அமையவுள்ள ஒரு நெடுஞ்சாலைக்காக ரூ.350 கோடி நிதியையும் இந்தியாஅளிக்கவுள்ளது.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் இந்தியாவுக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ளார். நேற்றுஇரவு அவர் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும்இடையிலான நல்லுறவுகளை வளர்ப்பது தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்தனர்.
முன்னதாக இந்தியத் தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய கர்சாய்,இந்தியத் தொழில் அதிபர்கள் ஆப்கானிஸ்தானில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்றவேண்டுகோள் விடுத்தார்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள ஜராஞ்ச்-திலாராம் ஆகிய நகரங்களுக்கிடையேஅமைக்கப்படவுள்ள நெடுஞ்சாலைப் பணிகளுக்காக ரூ.350 கோடியை இந்தியா ஒதுக்கியுள்ளது.
மேலும் ஆப்கான் ராணுவத்திற்கு 300 டிரக்குகள் மற்றும் ஜீப்புகள் ஆகியவற்றைத் தரவும் இந்தியாஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவின் இந்த உதவிகளுக்காக கர்சாய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் இன்று நடைபெற்ற ஒரு விழாவில் ஏர்பஸ் விமானம்ஒன்றையும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கியது. கர்சாயிடம் விமானப் போக்குவரத்துத் துறைஅமைச்சர் ஷானவாஸ் ஹூசேன் இதை முறைப்படி வழங்கினார்.
ஏ-300 பி4 ரகத்தைச் சேர்ந்த இந்த ஏர்பஸ் விமானத்தில் 232 பயணிகள் செல்லலாம்.விமானத்தினுள் சென்று அதைப் பார்வையிட்ட கர்சாய் அதன் வேலைப்பாடுகளைக் கண்டுஆச்சரியம் அடைந்தார்.
ஆப்கானிஸ்தான் அரசுக்குச் சொந்தமான ஏரியானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே இரண்டுஏர்பஸ் விமானங்களை கடந்த ஆண்டு இந்தியா வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இந்திய விமானப் படைக்குச் சொந்தமானஹெலிகாப்டரில் சிம்லாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் கர்சாய்.


