நீதிமன்றங்களை மூடிவிடுவோம்: தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை
சென்னை:
நீதிமன்றங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கி, ஊழியர்களையும் நியமிக்கவில்லை என்றால்தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்ய வேண்டி இருக்கும் என்று தமிழக அரசுக்குசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உயர் நீதிமன்றம் உள்பட பல்வேறு நீதித் துறைகளில் ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதுகுறித்து தமிழக அரசுக்குக் கடிதம் எழுதிய உயர் நீதிமன்றப் பதிவாளர், அவற்றை உடனடியாகநிரப்பும்படி கோரிக்கை விடுத்தார்.
ஆனால் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பணியிடங்களை நிரப்ப முடியாது என தமிழக அரசுபதிலளித்து விட்டது.
இதையடுத்து நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றம் நீதிபதி ரவிராஜ பாண்டியன் ஆகியோர் அடங்கியமுதலாவது டிவிஷன் பெஞ்ச், பதிவாளரின் கடிதத்தையே ரிட் மனுவாக ஏற்று அதை விசாரணைக்குஎடுத்துக் கொண்டது.
இந்த மனு மீது நடந்த விசாரணையின்போது நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறுகையில்,
நாடாளுமன்றத்திலும் சட்டசபையிலும் சட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்விகள்கேட்கப்படுகின்றன. எங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்காமல் நாங்கள் எப்படிச் செயல்படமுடியும்?
போதுமான நிதி மற்றும் ஊழியர்கள் இல்லாத காரணத்தால் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்துமேதடைபடுகின்றன, காலதாமதம் ஆகின்றன. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் நீதிமன்றங்களை மூடவேண்டியிருக்கும். அதற்கு மாநில அரசின் நிதி நிலை சரியில்லை என்பதைத்தான் காரணம்கூறுவோம்.
மேலும் தமிழக அரசு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் பிரகடனம் செய்து, ஜனாதிபதிக்குப்பரிந்துரையும் செய்ய வேண்டியிருக்கும். நிச்சயம் பரிந்துரையும் செய்வோம். நீதிமன்றங்கள்மூடப்பட்டால் நீங்கள் (தமிழக அரசு) ஓய்வாக இருக்கலாம். நாங்களும் ஓய்வாக இருக்கலாம்.இவ்விஷயத்தில் நாங்கள் மிகவும் சோர்ந்து போய் விட்டோம்.
அரசு செலவுக்கு மட்டும்தான் கஜானா உள்ளதாக தமிழக அரசு நினைக்கிறது. இதுதான் பிரச்சனையே.அரசுக்கும் அரசாங்கத்துக்கும் வித்தியாசங்கள் உள்ளன. அரசாங்கம் என்பது அரசின் ஒருஅங்கம்தான். தமிழக அரசு தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நீங்கள் தர்மம் செய்யவில்லை. அரசியல் சாசனக் கடமையைத்தான் நிறைவேற்றுகிறீர்கள். கடந்தஒன்றரை ஆண்டு காலமாக நான் இந்த நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கிறேன். அரசுக்கும்அரசாங்கத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளைக் கூட இந்த அரசால் அறிய முடியவில்லை.
கஜானாவுக்கு அரசுதான் முதலாளி என நினைக்கிறீர்களா? அட்வகேட் ஜெனரலைக் கூப்பிடுங்கள்என்று கோபத்துடன் அழைத்தார் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி.
உடனே அட்வகேட் ஜெனரலான என்.ஆர். சந்திரன் நீதிமன்ற பெஞ்ச் முன் ஓடி வந்தார். அவரிடம்"நீதித் துறையில் பணியாளர்கள் தட்டுப்பாடு உள்ளது. நாங்கள் எப்படிப் பணியாற்ற வேண்டும்என்று நினைக்கிறீர்கள்?" என்று நீதிபதி சுபாஷன் ரெட்டி கேட்டார்.
இது தொடர்பாக வரும் 11ம் தேதி விளக்கம் அளிப்பதாக சந்திரன் கூறியதைத் தொடர்ந்து,இவ்வழக்கின் விசாரணையையும் அந்தத் தேதிக்கே நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இளங்கோவன் கேள்வி:
இதற்கிடையே தலைமை நீதிபதியின் கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதா என்ன பதில் சொல்லப்போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன்.
அவர் பேசுகையில், முந்தைய திமுக ஆட்சியினர் கஜானாவைக் காலி செய்து விட்டனர் என்று கூறிவரும் ஜெயலலிதா, தற்போது மட்டும் எப்படி கோடிக் கணக்கில் செலவழித்து மாவட்ட வாரியாகஹெலிகாப்டரில் சுற்றிக் கொண்டிருக்கிறார். இது தேவையா. இந்தப் பணததை பட்டினி கிடக்கும்விவசாயிகளுக்கு தரலாமே.
நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார் என்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் இது தொடர்பாக கூறுகையில், "தலைமைநீதிபதியே குமுறும் அளவுக்கு தமிழக அரசின் பொருளாதார நிலை சீர்குலைந்து விட்டது. எனவேஜெயலலிதா அரசுக்கு எதிராகப் போராட எதிர்க் கட்சிகள் ஒரே அணியில் திரள வேண்டும்" என்றார்.
நாடாளுமன்றத்தில் எதிரொலி:
இதற்கிடையே நீதிபதி சுபாஷன் ரெட்டியின் எச்சரிக்கை இன்று நாடாளுமன்றத்திலும்எதிரொலித்தது.
இதுதொடர்பாக மக்களவையில் திமுக எம்.பியான ஆதிசங்கர் பேசுகையில், இந்த விவகாரத்தில்மத்திய அரசு தலையிடுமா என்று கேள்வி எழுப்பினார்.
அவருக்கு நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங் பதிலளிக்கையில், "இது மாநில அரசுக்கும்அரசியல்வாதிகளுக்கும், சென்னை நீதிமன்றத்திற்கும் இடையிலான பிரச்சனை. மத்திய அரசு இதில்தலையிடாது. மேலும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்களுக்கு நாங்கள்பதில் சொல்லவும் விரும்பவில்லை" என்றார்.


