""அடக்கம் இல்லை என்றால் முடக்கம்தான்"": ஜெயாவுக்கு கருணாநிதி சாபம்
சென்னை:
"வெற்றிகளைப் பெறப் பெற அடக்கம் வர வேண்டும். இல்லை என்றால் முடக்கம்தான் ஏற்படும்.இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்" என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நிறைய தர்மங்களைச் செய்துள்ளதால்தான் சாத்தான்குளத்தில் வெற்றி பெற்றுள்ளதாக முதல்வர்ஜெயலலிதா கூறுகிறார்.
அது உண்மைதான். அவ்வளவு தர்மங்களையும், அதாவது அவ்வளவு பணத்தையும் சாத்தான்குளம்மக்களுக்கு அள்ளி எறிந்துதான் இந்த வெற்றியை அவர்கள் பெற்றுள்ளனர்.
அதிமுக அளவுக்கு தர்மம் செய்ய எங்களிடம் காசு இல்லை. லட்சக்கணக்கான பணம் எங்களிடம்இல்லையே தவிர, லட்சியங்கள் எப்போதும் திமுகவினரிடம் உண்டு.
வெற்றி பெறப் பெற ஒருவருக்கு அடக்கம் வர வேண்டும். இல்லை என்றால் அவருக்குமுடக்கம்தான் ஏற்படும். இதை ஆட்சியில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்க் கட்சிகளை விமர்சித்து அவர்கள் ஆணவத்துடன் பேசுவது நீண்ட நாளைக்குத் தொடராதுஎன்று கூறினார் கருணாநிதி.


