பிளஸ் டூ ஆங்கில தேர்வு: "பிட்" அடித்த 83 மாணவர்கள் சிக்கினர்
சென்னை:
தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிளஸ் டூ தேர்வின்போது காப்பியடித்த 83மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
கடந்த 3ம் தேதி முதல் பிளஸ் டூ தேர்வுகள் நடந்து வருகின்றன. சுமார் 4.67 லட்சம் மாணவ,மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இந்நிலையில் பல மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வு கடினம் என்பதால் நிச்சயம் அப்போதுமாணவர்கள் "பிட்" அடிப்பார்கள் என்று அதிகாரிகள் கருதினர். இதையடுத்து நேற்று முன்தினம்தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் அதிரடி சோதனைகளை நடத்தினர்.
அப்போது சென்னையில் 3 மாணவர்கள், சேலத்தில் 5 மாணவர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 22மாணவர்கள் காப்பி அடித்ததற்காகப் பிடிபட்டனர். இதையடுத்து அவர்களுடைய ஆங்கிலம் முதல்தாளுக்கான விடைத்தாள் முடக்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வின்போதும் பலமாணவர்கள் தங்கள் கைவரிசையைக் காண்பித்தனர். நேற்று நடந்த சோதனையில் மட்டும் தமிழகம்முழுவதும் 61 பேர் சிக்கியுள்ளனர்.
சென்னையில் 2 பேர், கடலூர் மாவட்டத்தில் 20 பேர், விழுப்புரம் மாவட்டத்தில் 7 பேர்,திருவள்ளூர் மாவட்டத்தில் 8 பேர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 பேர், திருவண்ணாமலைமாவட்டத்தில் 15 பேர், சேலம் மாவட்டத்தில் 2 பேர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் 4 பேர் நேற்றைசோதனையில் "பிட்" அடித்து மாட்டிக் கொண்டனர்.
அவர்களுடைய ஆங்கிலம் இரண்டாம் தாள் விடைத் தாள்கள் ரத்து செய்யப்பட்டு, அந்தமாணவர்களும் உடனடியாக தேர்வு மையங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் கூறுகையில்,
"பிட்" எழுதி வைத்திருந்து அதை விடைத் தாளில் எழுதாமல் மாணவர்கள் வைத்திருந்தால் அந்தத்தேர்வு மட்டும் ரத்து செய்யப்படும்.
ஆனால் "பிட்" வைத்திருந்து, அதை விடைத் தாளிலும் எழுதியிருந்தால் அந்த மாணவர் எழுதியஒட்டுமொத்தத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும்.
"பிட்" அடித்து பிடிபட்ட மாணவர்கள் அடுத்த தேர்வுகளை எழுதலாம். ஆனால் மீண்டும் அவர்கள்பிடிபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அவர்களுடைய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்படும். மேலும் அடுத்த5 ஆண்டுகளுக்கு அவர்கள் தேர்வே எழுத முடியாதபடி தடை செய்யப்படும் அளவுக்கு கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தேவராஜன்.


