For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புரட்சித் தலைவியுடன் மோதும் தளபதி

By Staff
Google Oneindia Tamil News

மதுராந்தகம்:

ஜெயலலிதா என்ன புரட்சி செய்து புரட்சித் தலைவி ஆனார் என்று திமுக இளைஞரணிச் செயலாளரான ஸ்டாலின்கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுராந்தகத்தில் திமுக தொண்டரின் திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர்,

மாவட்டம், மாவட்டமாகப் போய் கருணாநிதியைத் திட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவே, மக்களைப் பற்றியும்கொஞ்சம் கவலைப்படுங்கள். மக்கள் பணத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் போய் அடுத்த கட்சிக்காரரைத் திட்டிக்கொண்டிருக்கிறார்.

கருணாநிதிக்கு புத்தி சொல்கிறார். இதற்கு ஜெயலலிதாவுக்கு எந்த வகையிலாவது தகுதி உண்டா?. என்னைப்பார்த்து தளபதியாம் தளபதி என்று கமெண்ட் அடிக்கிறார். இது நானே போட்டுக் கொண்ட பட்டம் என்கிறார்.

எனக்கு நானே படடம் தந்து கொள்ள நான் ஜெயலலிதா அல்ல. என் மீது பற்று கொண்ட கழகத்தினர் என்னைதளபதி என்று அழைக்கிறார்கள். இது உங்களுக்கு பொறுக்கவில்லையா?.

சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இவர் என்ன புரட்சி செய்து புரட்சித் தலைவி ஆனார். எந்த நாட்டுக்குபடையோடு போனார். எந்த நாட்டை வென்றார்? அதெல்லாம் கூட வேண்டாம், உங்கள் வாழ்க்கையில் தமிழகமக்களுக்காக ஏதாவது ஒரு போராட்டம், ஒரு மறியல், ஒரு ஆர்பாட்டமாவது நடத்தியது உண்டா?

மக்களுக்காக போராடியாவது சிறை சென்றாரா இல்லை. ஊழல் செய்து தான் சிறைக்குப் போனார். இவர் எப்படிபுரட்சித் தலைவியாக முடியும் என்று கேட்டார் ஸ்டாலின்.

அடக்கம் இல்லையேல் முடக்மே

வெற்றிகளைப் பெறப் பெற அடக்கம் வர வேண்டும். இல்லை என்றால் முடக்கம்தான் ஏற்படும். இதை ஜெயலலிதா உணரவேண்டும்" என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,

நிறைய தர்மங்களைச் செய்துள்ளதால்தான் சாத்தான்குளத்தில் வெற்றி பெற்றுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். அதுஉண்மைதான். அவ்வளவு தர்மங்களையும், அதாவது அவ்வளவு பணத்தையும் சாத்தான்குளம் மக்களுக்கு அள்ளி எறிந்துதான் இந்தவெற்றியை அவர்கள் பெற்றுள்ளனர்.

அதிமுக அளவுக்கு தர்மம் செய்ய எங்களிடம் காசு இல்லை. லட்சக்கணக்கான பணம் எங்களிடம் இல்லையே தவிர, லட்சியங்கள்எப்போதும் திமுகவினரிடம் உண்டு.

வெற்றி பெறப் பெற ஒருவருக்கு அடக்கம் வர வேண்டும். இல்லை என்றால் அவருக்கு முடக்கம்தான் ஏற்படும். இதைஆட்சியில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X