நல்ல மாட்டுக்கு ஒரு சூடு: ஜெ. அரசு குறித்து கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் மீண்டும் லாட்டரிகளுக்கு அனுமதி அளிக்க பண பேரம் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாக திமுக தலைவர்கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதாவின் மாவட்ட சுற்றுலாவை ஒட்டி அவரை வரவேற்று பத்திரிக்கைகளில் பக்கம், பக்கமாகவிளம்பரங்கள் வர ஆரம்பித்துள்ளன. லாட்டரி முதலாளிகளின் தான் இந்த விளம்பர்களைத் தந்து வருகின்றனர்.
இதனால், அவர்களுடன் பேரம் பேசி முடிக்கப்பட்டுவிட்டது தெளிவாகிவிட்டது. விரைவில் லாட்டரிகளுக்குவிதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கலாம். பேரம் படியாததால் தான் முதலில் லாட்டரிகளுக்குத் தடைவிதித்தனர். இப்போது எல்லாம் பேசி முடிக்கப்பட்டுவிட்டது.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். ஆனால், தமிழக அரசுக்கு தேர்தல் கமிஷனும், உயர் நீதிமன்றமுமாகஇரண்டு முறை சூடு கொடுத்துவிட்டன. ஆனால், இதனால் எல்லாம் ஜெயலலிதா போன்றவர்கள் திருந்திவிடமாட்டார்கள்.
சட்டமன்றத்தில் திமுகவினர் கலாட்டாவில் ஈடுபடுவதாக ஜெயலலிதா பேசுகிறார். ஜானகி அணி, ஜெ அணி என்றுஇரு பிரிவாக அதிமுகவினர் அடித்து நாறி ரத்தக் காயங்களுடன் சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்தார்களே.அதற்கு என்ன பெயர்?
பட்ஜெட் தாக்கல் செய்யப் போன என்னை முகத்தில் குத்தி கண்ணாடியை உடைத்துவிட்டு, பட்ஜெட் பேப்பரகளைகிழித்து எறிந்தார்களே அதிமுகவினர். அதற்கு என்ன பெயர்?.
இந்த அம்மையார் அடக்கமாகப் பேசுவது நல்லது. இல்லாவிட்டால் சுவற்றில் அடித்த பந்து மாதிரி அதுஅவருக்கே திரும்ப வரும். முன்பெல்லாம் தம்பி காளிமுத்து ஜெயலலிதாவை விமர்சித்து தடார், படார் என்றுபேசுவார். இப்போது அம்மையாரை வாழ்த்திப் பேசும் தந்திரத்தை வளர்த்துக் கொண்டுவிட்டார். இதனால் தான்ஜெயலலிதாவை பாராட்டுகிறேன் என்று சொல்லி தன்னை வளர்த்த எம்.ஜி.ஆரைக் கூட கீழே இறக்குகிறார்.
வெற்றி என்பது அட்டூழயத்தால் கிடைப்பதல்ல என்று ஜெயலலிதா கூயிருக்கிறார். இது சாத்தான்குளம் வெற்றிகுறித்த அவரது சுய விமர்சனமாகவே கருதுகிறேன்.
என்னை விமர்சிக்க ஜெயலலிதா பரமார்த்த குரு கதை சொன்னதில் இருந்து தமிழக அமைச்சர்கள் பரமார்த்த குருகதை புத்தகத்தைத் தேடி அலைவதாய் கேள்விப்பட்டேன். மேலும் பலர் தெனாலி ராமன் கதைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்களாமே என்று கிண்டலாய் கேட்டார் கருணாநிதி.


