"ஒரே கல்லில் 2 மாங்காய்": சாத்தான்குளத்திற்கு அரசு விழாவை மாற்றிய ஜெ.
சென்னை:
தூத்துக்குடியில் வரும் 14ம் தேதி நடைபெற இருந்த அரசு விழா தற்போது சாத்தான்குளத்திற்குமாற்றப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணம் அமோக வெற்றிபெற்றார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளைத் துவக்கி வைக்கவும், நலத் திட்ட உதவிகளைவழங்கவும் ஜெயலலிதா அங்கு செல்கிறார்.
தூத்துக்குடியில்தான் இந்த அரசு விழா நடப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இது சாத்தான்குளத்திற்குமாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நலத் திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்து விட்டு, அப்படியே அதிமுகவுக்கு வாக்களித்தசாத்தான்குளம் தொகுதி மக்களுக்கு நன்றியும் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளார் ஜெயலலிதா.
மார்ச் 14ம் தேதி சாத்தான்குளம் செல்லும் ஜெயலலிதா, அங்கு தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கான நலத்திட்டஉதவிகளை வழங்குகிறார். திட்டப் பணிகளையும் துவக்கி வைக்கிறார்.
சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறிய உறுதிமொழிகளுக்கேற்ப பல திட்டங்களுக்கு முதல்வர்அடிக்கல் நாட்டுகிறார். தங்களை சந்தோஷத்தில் ஆழ்த்த மேலும் சில புதிய திட்டங்களையும் ஜெயலலிதாஅறிவிப்பார் என சாத்தான்குளம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதிமுக வெற்றிக்குப் பிறகு சாத்தான்குளத்திற்கு ஜெயலலிதா வரவிருப்பதால் மிகவும் பிரமாண்டமான முறையில்வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் அக்கட்சிப் பிரமுகர்கள்.


