For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோ விடுதலைக்காக உண்ணாவிரதம்: காங். பங்கேற்க மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரை விடுவிக்கக் கோரி திமுகதலைமையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காது என அக்கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே பொடா சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுகூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் கைதைஎதிர்த்து வரும் 23ம் தேதி தமிழகம் முழுவதும் கூட்டாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திமுக தலைமையில்நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், நேற்றிரவு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்ணாவிரதப் போராட்டம் 29ம்தேதிக்கு மாற்றப்படுவதாக அறிவித்துள்ளார்.

மதிமுக, பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் திமுக நடத்திய கூட்டத்தில் பங்கேற்றுவின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் ஆகியவை கருணாநிதி நடத்திய இக் கூட்டத்தைப் புறக்கணித்தன. பா.ஜ.கவுக்கு அழைப்பேவிடுக்கப்படவில்லை.

பொடாவைத் தீவிரமாக எதிர்த்தாலும் புலிகளை ஆதரிக்கும் வைகோவையும், பழ.நெடுமாறனையும் விடுவிக்கக்கோரி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ் கூறிவிட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கொண்டு பொடா சட்டத்தை எதிர்ப்பதாக திமுக கூறுவது முரண்பாடாகஉள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறிவிட்டது. விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்திருமாவளனும் இதே கருத்தைத் தான் தெரிவித்தார்.

இந் நிலையில் 29ம் தேதி திமுக நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ்செயல் தலைவர் இளங்கோவன் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். வைகோ, பழ.நெடுமாறன் போன்ற புலிகள்ஆதரவுத் தலைவர்களின் விடுதலைககாக நடக்கும் இப் போராட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ள இயலாது எனஅவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகளும் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்பது குறித்து இன்னும் கருத்துத்தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, நேற்று திமுக தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ஜ.கவுக்கு அழைப்புவிடுக்காததற்கு அக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எங்களையும் அழைத்திருந்தால் எங்கள் கருத்தைத்தெரிவித்திருப்போம் என அக் கட்சியின் தமிழக பிரிவு கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X