6 மணி நேரம் "லேட்டாய்" வந்த பாண்டியன்!
மதுரை:
அதி விரைவு ரயில் என்று அழைக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி நேரம் தாமதமாகமதுரைக்குப் போய்ச் சேர்ந்து பயணிகளை வெறுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
தமிழகத்தின் அதி விரைவு எக்ஸ்பிரஸ் ரயில்களில் முக்கியமானது பாண்டியன் எக்ஸ்பிரஸ். அதிகஅளவுப் பயணிகள் பயணம் செய்யும் ரயில் என்ற பெயரையும் பெற்றது.
வழக்கம்போல நேற்றிரவு (புதன்கிழமை) 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திலிருந்து கிளம்பிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தை நெருங்கியபோது என்ஜினில்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
கோளாறு சரி செய்யப்பட்டதும் மீண்டும் கிளம்பிய ரயில் மறுபடியும் செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டது. என்ஜினில் மறுபடியும் கோளாறு என்று காரணம் கூறப்பட்டது.
புறப்பட்ட 2 மணி நேரத்தில் இரண்டுமுறை கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும்எரிச்சலடைந்தனர். சுமார் 1 மணி நேரம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்ற ரயில் பின்னர் ஒருவழியாகக் கிளம்பியது.
ஆனால், வழக்கமான வேகத்தில் செல்லாமல் மெதுவாகவே சென்றது. இந் நிலையில் விழுப்புரத்தைஅடைந்ததும் மறுபடியும் கோளாறு ஏற்படவே மீண்டும் ரயில் நிறுத்தப்பட்டது. இந்த முறைபயணிகளின் எரிச்சல் எல்லை கடந்தது.
அப்படி இப்படியாக ஒரு வழியாக இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 12 மணிக்குத் தான் ரயில்மதுரை சென்றடைந்தது.
வெறுத்துப் போன பயணிகள் புலம்பியபடி வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்தனர்.


