ராஜ்குமாருக்கு செயற்கை இடுப்பு எலும்பு பொறுத்தப்பட்டது
சென்னை:
சென்னை மியாட் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு இன்றுகலை இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.
இரு நாட்களுக்குப் பின் அவரது வலது மூட்டிலும் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டு காட்டில் அலைகழிக்கப்பட்டதால் அவருக்குஏற்கனவே இருந்த இடுப்பு எலும்பு தேய்மானப் பிரச்சனை அதிகரித்தது.
வீரப்பனால் விடுதலை செய்யப்பட்ட பின்னர் ஒருமுறை சென்னை வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார் ராஜ்குமார். இருப்பினும் சமீபகாலமாக அவருக்கு இடுப்பு மற்றும் வலது கால் மூட்டுவலி அதிகரித்துவிட்டது.
இதையடுத்து சென்னையில் உள்ள எலும்பு சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையான மியாட்டில்நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார். அவருடன் மனைவி பர்வதம்மா, மகன் ராகவேந்திர ராஜ்குமார்,குடும்ப டாக்டர் ரமணா ராவ் ஆகியோரும் வந்துள்ளனர்.
இன்று அவருக்கு டாக்டர் மோகன்தாஸ் தலைமையிலான குழு இந்த அறுவை சிகிச்சையை செய்தது.இடதுபக்க இடுப்பு எலும்பு முழுவதுமாக நீக்கப்பட்டு செயற்கை எலும்பு பொறுத்தப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்காக வேறு எங்கும் செல்ல விரும்பவில்லை. கர்நாடகத்தைவிட சென்னைதான்எங்களுக்கு அதிகம் தெரியும். காரணம், இங்குதான் 40 வருடங்களுக்கும் மேல் வசித்தோம் என்றுராஜ்குமாரின் மகன் ராகவேந்திர ராஜ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


