மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் வன்முறை
நாகப்பட்டனம்:
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களைசேதப்படுத்திய 48 விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கூட்டம் நடத்தினர். இதில் கட்சியின்பொதுச் செயலாளர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
கூட்டத்தையொட்டி பேரணி நடைபெற்றது. முக்கிய தெருக்கள், சாலைகள் வழியாக பேரணிகள்நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் கடை வீதி வழியாக பேரணி செல்லபோலீஸார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் ஆத்திரமடைந்து சாலைகளில் சென்றவாகனங்கள் மீது தாக்குதலில் இறங்கினர். இவர்களை அடக்க முயன்ற போலீஸாரையும் அவர்கள்சராமாரியாகத் தாக்கினர். இதில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 15 போலீசார்காயமடைந்தனர்.
அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள், கடைகள் ஆகியவையும் விடுதலைச் சிறுத்தைகள்தொண்டர்களின் தாக்குதலில் சேதமடைந்தன.
இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீஸார் 53 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில்48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


