For Daily Alerts
Just In
மேட்டூர் வற்றினாலும் சேலத்திற்கு பிரச்சினையில்லை: கலெக்டர்
மேட்டூர்:
சேலம் நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகமாவட்ட ஆட்சித் தலைவர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையிலிருந்துதான் சேலம் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போதுஅணை வற்றி விட்டதால் நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
இந் நிலையில் மேட்டூர் அணையை மாவட்ட ஆட்சித் தலைவர் ராதா கிருஷ்ணன் பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அணையில் தற்போது 27 அடி நீரே உள்ளது. இருப்பினும் சேலம் நகரில் குடிநீர்ப் பற்றாக்குறைஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளப்படும். அதற்கேற்ற நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.


