பரவுகிறது மர்ம நோய்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை
ஐ.நா. சபை:
ஆசியா கண்டத்தின் பல நாடுகளிலும் அடிபிகல நிமோனியா (atypical pneumonia) என்ற நோய் மிகவேகமாகப் பரவி வருகிறது.
வைரசுக்கு எதிரான மருந்துகளுக்கு இது கட்டுப்பாடாமல் இருப்பதால் இந்த நோய் குறித்து ஜாக்கிரதையாகஇருக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார மையம் சர்வதேச எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
தைவான், சிங்கப்பூர், சீனா, வியட்நாம் ஆகிய இடங்களிலும் இந்த நோய் பரவி உள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள்இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6 பேர் வரை இந் நோய்க்குப் பலியாகியுள்ளனர். மேலும் பலர்பாதிக்கப்பட்டுள்ளன.
கனடாவைச் சேர்ந்த தாயும் மகனும் ஹாங்காங்குக்கு வந்தபோது அவர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.பின்னர் கனடாவில் அவர்கள் உயிரிழந்தனர். அவர்களுடன் இருந்த மேலும் 4 உறவினர்களும் இந்த நோயினால்பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவில் ஹனாய் பகுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 11 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால்,மருத்துவமனையின் டாக்டர்கள் அனைவருக்கும் இந்த நோய் பரவியதால் அந்த மருத்துவமனையேமூடப்பட்டுவிட்டது.
மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நோயை ஏற்படுத்துவது பாக்டீரியா அல்ல என்றும், வைரஸ் தான்காரணம் என்று மட்டும் தெரியவந்துள்ளது. ஆனால், வைரசுக்கு எதிரான மருந்துகள், வாக்சீன்களுக்கு இந்த நோய்கட்டுப்படவில்லை என்பதால் கவலை பரவியுள்ளது.
இதையடுத்து உலக சுகாதர மையம் இந்த நோய் குறித்து சர்வதேச எச்சரிக்கையைப் பிறப்பித்துள்ளது.4 நாடுகளின்மிக முக்கிய ஆய்வகங்களில் நடந்த ஆய்வுகளிலும் கூட இந்த நோய்க்குக் காரணமான வைரஸ் எது என்றுகண்டுபிடிக்கப்படவில்லை.
முதலில் பயங்கர காய்ச்சல், உடல் வலி, தொண்டை பாதிப்பு என்று தொடங்கும் இந்த நோய் பின்னர் மூச்சுவிடுவதில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. முதலில் மருந்துகளுக்குக் கட்டுப்படுவது போலத் தெரிந்தாலும் பின்னர்தீவிரமான மூச்சுப் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்ட யாருக்கும் இதுவரை உடல் நலம் தேறவில்லை.
இதனால் உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்யிைல், இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனியேவைக்குமாறும், உங்கள் பகுதியில் இந் நோய் இருப்பதாகத் தெரிந்தால் உடனே நலத்துறையினருக்குதெரிவிக்குமாறும் கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்த நோய் பரவுவதைத் தடுக்க அந் நாடு சில நாட்டுப் பயணிகளுக்குத் தடை விதிக்கவும்முடிவு செய்துள்ளது.


